என்னை போட்டியிடுமாறு அழைப்பதால்
நான் வந்துள்ளேன்
செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் சஜித்
VIDEO இணைப்பு
“ஜனாதிபதித்
தேர்தலில் போட்டியிட
தயாரென நான்
கடிதம் ஒன்றை
கட்சித் தலைவருக்கு
அனுப்பினேன். எமது கட்சி ஜனநாயக கட்சி.
குடும்ப அல்லது
சமூக உறவுகளை
வைத்து நாம்
தீர்மானம் எடுக்க
மாட்டோம். பாராளுமன்ற
மற்றும் நிறைவேற்றுக்குழு
நான் தேர்தலில்
போட்டியிடுவதை விரைவில் முடிவு செய்ய வேண்டும்…”
அமைச்சர்
மங்களவின் இல்லத்தில்
தற்போது நடந்துவரும்
செய்தியாளர் மாநாட்டில் கோரிக்கை விடுத்தார் அமைச்சர்
சஜித் பிரேமதாச.
“கட்சிக்குள்
ஒரு நல்லிணக்கத்தை
ஏற்படுத்தும் வகையில் கட்சியின் கூட்டங்களை உடனடியாக
கூட்டி முடிவை
எடுக்கவேண்டும்.நான் மக்களின் கோரிக்கையை பிரதிபலிக்கிறேன். என்னை போட்டியிடுமாறு அவர்கள் அழைப்பதால்
நான் வந்துள்ளேன்.
நிறைய
வேட்பாளர்கள் கட்சிக்குள் இருப்பார்களானால்
தேவைப்படின் இரகசிய வாக்கெடுப்பை நடத்தி தீர்மானிக்கலாம்.இது பிரதமருக்கான
தேர்தல் அல்ல.
ஜனாதிபதித் தேர்தல் என்பதை பிரதமர் நினைவில்
கொள்ளவேண்டும்.நான் வேட்பாளராக நியமிக்கப்படுவேன் என்று நான் நம்புகிறேன்.நிறைவேற்று
அதிகார ஜனாதிபதி
முறைமையை ஒழிக்கப்பட
வேண்டுமென பேசப்படுகிறது.
மக்கள் விருப்பே
என் விருப்பு.ஜனநாயக ரீதியில்
எதனையும் செய்ய
முயல்வதே எனது
நோக்கு.நாம்
அனைத்து கட்சிகளுடன்
பேச்சு நடத்தி
வருகிறோம். ”
என்றும்
குறிப்பிட்டார் சஜித்.
கட்சிக்குள்
எந்த சர்ச்சைகளும்
இல்லை என்று
இங்கு அமைச்சர்
மங்கள குறிப்பிட்டார்.
0 comments:
Post a Comment