24.09.2019 அன்று இடம்பெற்ற
அமைச்சரவையில் 
மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள்    




01. தற்போதைய ஆகக் குறைந்த தேசிய சம்பளத்தை அதிகரிக்கும் வகையில் 2016ஆம் ஆண்டு இல 3 இன் கீழான ஊழியர்களின் ஆகக் குறைந்த கொடுப்பனவு சட்டத்தில் திருத்தத்தை மேற்கொள்ளல்

2016ஆம் ஆண்டு இல 3இன் கீழான ஊழியர்களின் ஆகக் குறைந்த கொடுப்பனவு சட்டத்திற்கு அமைவாக 2016ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1ஆம் திகதி தொடக்கம் நடைமுறைப்படுத்தும் வகையில் ரூபா 10,000 (ரூபா 400*25) தேசிய ஆகக் குறைந்த மாதாந்த சம்பளம் மற்றும் ரூபா 400 (50*8) தேசிய ஆகக் குறைந்த நாளாந்த ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வாழ்க்கைச் செலவை கவனத்தில் கொண்டு அதில் தேசிய ஆகக் குறைந்த மாதாந்த சம்பளமாக தற்பொழுது உள்ள ரூபா 10,000 தொடக்கம் ரூபா 12,500 வரையிலும் ரூபா 2,500 இனாலும் தேசிய ஆகக் குறைந்த நாளாந்த சம்பளம் ரூபா 400 தொடக்கம் ரூபா 500 வரையிலும் 100 ரூபாவினாலும் அதிகரிக்கக்கூடிய வகையில் குறிப்பிட்ட சட்டத்தில் 3ஆவது சரத்தை திருத்துவதற்கு அமைச்சரவையினால் இதற்கு முன்னர் அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்தது. இதற்கமைவாக 2016ஆம் ஆண்டு இலக்கம் 03 இன் கீழான ஊழியர்களின் ஆகக் குறைந்த சம்பள சட்டத்தின் 3ஆவது சரத்தில் திருத்தத்தை மேற்கொண்டு சட்டத்திருத்த வரைவினால் தயாரிக்கப்பட்ட திருத்த சட்டமூலத்தை அரசாங்கத்தின் வர்த்தமானியில் வெளியிடுவதற்கும் அதனைத் தொடர்ந்து திருத்த சட்ட மூலத்தை பாராளுமன்றத்தின் அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்குமான அமைச்சரவை அந்தஸ்து அற்ற தொழில் மற்றும் தொழில் சங்க தொடர்புகள் அமைச்சரின் கோரிக்கைக்கு அமைவாக ஜனாதிபதி சமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

02. தேசிய பாதுகாப்பு நடவடிக்கை பணிகளை வலுப்படுத்துதல்

2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி மத அடிப்படைவாதிகளினால் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தொடர் தாக்குதலுக்குப் பின்னர் தேசிய பாதுகாப்பை சிறப்பாக உறுதி செய்வதில் சவால்களை எதிர்கொள்வதற்காக அதற்கென தற்பொழுது உள்ள நிருவக நடவடிக்கை கட்டமைப்பை மேலும் முறையான வகையில் வலுவூட்டுவதன் அவசியம் அடையாளம் காணப்பட்டுள்ளது. இதற்கமைவாக 1999ஆம் ஆண்டில் பொது மக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் பிறப்பிக்கப்பட்ட வழிகாட்டல்களுக்கு அமைவாக அமைக்கப்பட்ட தேசிய பாதுகாப்பு சபை மற்றும் புதிதாக நியமிப்பதற்கு ஆலோசிக்கப்பட்டுள்ள தேசிய பாதுகாப்பு ஆலோசனைக்குழு, தேசிய பாதுகாப்புச் சபை செயலகம் மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பான நிபுணத்துவ குழு (பொருளாதாரம், சர்வதேச அலுவல்கள், சமூக மற்றும் மதம், ஆய்வு மற்றும் அறிவியல், பகுப்பாய்வு மற்றும் தொழில்; நுட்பம் மற்றும் மூலோபாய முகாமைத்துவம்) பாராளுமன்ற சட்டத்தின் மூலம் ஸ்தாபிப்பதற்காக தேவையான சட்டத் தயாரிப்புக்களை மேற்கொள்வதற்காக சட்டத்திருத்த வரைவு பிரிவிற்கு ஆலோசனை வழங்குவதற்காக ஜனாதிபதி சமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

03. யுத்த காலப்பகுதியில் நிலவிய குறிப்பிட்ட கால எல்லைப் பகுதியில் நடைமுறைப்படுத்தப்பட்ட பிரதேசங்கள் மற்றும் நடைமுறைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக பெயரிடப்படாத பிரதேசங்களில் கடமைகளில் ஈடுபட்டிருந்த போது நேரடியாகவும் பயங்கரவாத செயற்பாடுகள் காரணமாக அல்லது பயங்கரவாத நடவடிக்கைகளை தடுப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் காரணமாக ஊனமுற்ற மற்றும் உயிரிழந்த முப்படை மற்றும் பொலிஸ் அங்கத்தவர்களுக்காக அவர்களின் 55 வயதை பூர்த்தி செய்யும் வரையில் செலுத்தப்படும் சம்பளம் மற்றும் கொடுப்பனவை உயிரிழந்த அங்கத்தவரில் தங்கிருப்பவர்களுக்கு வாழந்து கொண்டிருக்கும் வரையிலும் ஊனமுற்ற அங்கத்தவர்கள் வாழும் வரையிலும் வழங்குதல்

சம்பந்தப்பட்ட விடயங்களை குறித்து சரிபார்த்து சிபார்சுகளை சமர்ப்பிப்பதற்காக அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட நிர்வாக விடயதான அமைச்சின் மேலதிக செயலாளரின் தலைமையிலான அதிகாரிகள் குழுவொன்றினால் சமர்ப்பிக்கப்பட்ட சிபாரிசுக்கமைய யுத்த காலப்பகுதியில் நிலவிய குறிப்பிட்ட காலப்பகுதியில் செயல்படுத்தப்பட்ட பிரதேசங்கள் மற்றும் நடைமுறைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக பெயரிடப்படாத பிரதேசத்தில் கடமையில் ஈடுபட்டிருந்த போது நேரடியாக பயங்கரவாத செயற்பாடுகள் அல்லது பயங்கரவாதத்தை ஒடுக்குவதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளுக்காக ஊனமுற்ற, உயிரிழந்த முப்படை மற்றும் பொலிஸ் அங்கத்தவர்களுக்கும் அவர்களில் தங்கியிருப்பவர்களுக்கும் அவர்களினால் தற்போது கிடைக்கப்பெறும் பயன்களுக்கு மேலதிகமாக மேலும் நிவாரணம் வழங்குவதற்காக பாதுகாப்பு அமைச்சர் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

04. 1993ஆம் ஆண்டு இல 50 இன் கீழான தேசிய இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரண அதிகார சபை சட்டத்தில் திருத்தத்தை மேற்கொள்ளல்

இலங்கையில் இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரண துறை தொடர்பில் தற்பொழுது ஏற்பட்டுள்ள மற்றும் எதிர்காலத்தில் ஏற்படக்கூடும் என்று எதிர்பார்க்கப்படும் உடனடி மற்றும் நிறுவன பிரச்சினைகளுக்கு கொள்கை ரீதியில் பிரச்சினைகளுக்கு தீர்வைக் கண்டறிவதற்காகவும் சட்டத்தின் நோக்கங்களை நிறைவேற்றுவதற்காகவும் 1993ஆம் ஆண்டு இல 50 இன் கீழான தேசிய இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரண சட்டத்தின் சில சரத்துக்களில் திருத்தத்தை மேற்கொள்ளல் மற்றும் அதற்காக திருத்த சட்ட மூலத்தை தயாரிப்பதற்கு ஆலோசனைகளை வழங்குவதற்காக மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சர் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

05. ஸ்ரீ ஜயவர்தனபுர தேசிய தாதியர் பயிற்சி பாடசலைக் கொழும்பு பல்கலைக்கழக தாதியர் பீடம் பொறுப்பேற்றுக்கொள்ளல்

உயர் செயலாற்றலைக் கொண்ட உலகளாவிய ரீதியில் போட்டி மட்டத்தில் தாதியர் தொழிற்துறையினரை உருவாக்கும் நோக்கத்தைக் கொண்டு தாதியர் கல்வி பட்டதாரி நிலை வரையில் விரிவுபடுத்துவதற்காக தாதியர் வைத்திய பீடமொன்றை கொழும்பு பல்கலைக்கழத்துடன் இணைந்ததாக ஸ்ரீ ஜயவர்தனபுர தேசிய தாதியர் பயிற்சி பாடசாலைக் கட்டிடத்தை பயன்படுத்தி 2018ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சுகாதார போஷாக்கு மற்றும் சுதேசிய வைத்திய துறை அமைச்சின் கீழ் நிர்வகிக்கப்படும் இந்த தாதியர் பயிற்சி பாடசாலைக்கு உட்பட்ட சொத்து மற்றும் அதன் பணியாளர் சபை மற்றும் சம்பந்தப்பட்ட கட்டிடம் அமைந்துள்ள ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலைக்கு உட்டபட்ட காணி கொழும்பு பல்கலைக்கழகத்தின் தாதியர் வைத்திய பீடத்தினால் பயன்படுத்தக்கூடிய வகையில் நகர திட்டமிடல் நீர் விநியோகம் மற்றும் உயர்கல்வி அமைச்சு ஊடாக கொழும்பு பல்கலைக்கழகம் பொறுப்பேற்றுக்கொள்ளும் வகையில் நகர திட்டமிடல் நீர் விநியோகம் மற்றும் உயர்கல்வி அமைச்சர் சமர்ப்பித்த பரி;ந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

06. நுரைச்சோலை அனல் மின் நிலையத்தை விரிவுபடுத்துதல்

நுரைச்சோலை நிலக்கரி அனல் மின் நிலையத்தை விரிவுபடுத்தும் நடவடிக்கையாக புதிய அனல் மின் நிலையத்தை நிர்மாணிப்பதற்கு அமைச்சரவையினால் இதற்கு முன்னர் அனுமதிக்கப்பட்ட இலங்கையின் எதிர்கால மின்சார தேவை தொடர்பான கொள்கை மற்றும் இலங்கை பொது மக்கள் பொதுப் பயன்பாடு ஆணைக்குழுவினால் 2018-2037 ஆண்டுக்காக அங்கீகரிக்கப்பட்ட நீண்டகால மின்சார தேவைக்கான திட்டத்திற்கு இணைவான வகையில் கவனத்தில் கொண்டு 300 மெகாவோல்ட் மின்வலுவை கொண்ட 04 மின்சார அலகுகளை நுரைச்சோலை நிலக்கரி மின் அலகை நீடிக்கும் வகையில் அதனை அந்த சுற்றாடல் பகுதியில் நிர்மாணிப்பதற்கென மின்சக்கி எரிசக்கி வர்த்தக அபிவிருத்தி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணத்திற்கு அமைச்சரவை கொள்கை ரீதியில் அங்கீகாரம் அளித்துள்ளது.

07.இலங்கை கடற்றொழில் துறைமுக கூட்டுத்தாபனத்திற்கென சட்டமொன்றுக்காக சட்டத்திருத்தத்தை மேற்கொள்ளல்

இலங்கை கடற்றொழில் துறைமுக கூட்டுத்தாபனத்தை சட்ட ரீதியல் வலுவூட்டி வருமானத்தை திரட்டும் ஆற்றலை மேம்படுத்துவதன் மூலம் சுயமாக செயல்படுத்துவதற்கு தேவையான வருமானத்தை பெற்றுக் கொள்வதைப் போன்று இலாபத்தைக் கொண்ட நிறுவனமாக தரமுயர்த்தும் நோக்கில் அந்த கூட்டுத்தாபனத்தின் தனித்துவத்திற்கான புதிய பாராளுமன்ற சட்டத்தின் திருத்த மூலத்தை தயாரிப்பதற்கான திருத்த சட்டமூலத்தை மேற்கொள்வதற்காக விவசாய கிராமிய பொருளாதார அலுவல்கள் நீர்ப்பாசனம் மற்றும் கடற்றொழில் நீரியல் வள அபவிருத்தி அமைச்சர் சமர்ப்பி;த்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

08. விவசாய கிராமிய பொருளாதார அலுவல்கள் மற்றும் கடற்றொழில் மற்றும் நீரியல் வள அபிவிருத்தி அமைச்சை ஸ்தாபிப்பதற்காக புதிய கட்டிடமொன்றை நிர்மாணித்தல்

விவசாய அபிவிருத்தி திணைக்களம் உள்ளிட்ட விவசாயம் கிராமிய பொருளாதார அலுவல்கள் நீர்ப்பாசனம்;, கடற்றொழில் மற்றும் நீரியல் வள அபிவிருத்தி அமைச்சின் கீழ் உள்ள கொழும்பில் அமைந்துள்ள ஏனைய அலுவலகங்கள் 'கொவிஜன மந்திரய' என்ற ஒரே அலுவக கட்டிடமாக ஸ்தாபிக்கக்கூடிய வகையில் இந்த அமைச்சுக்கு உட்பட்ட காணி, அபிவிருத்தி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சுக்கு அருகாமையில் உள்ள சுமார் 6 ஏக்கர் காணியை பத்தரமுல்லையில் உள்ள 'அம்பலங்கொடல்ல' என்ற காணியில் மாடி கட்டிடத் தொகுதி நிர்மாணிப்பதற்காக விவசாயம், கிராமிய பொருளாதார அலுவல்கள், நீர்பாசனம் மற்றும் கடற்றொழில் நீரியல் வள அபிவிருத்தி அமைச்சர் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

09. தெற்காசிய வலயத்தில் பிரதேச ஒன்றிணைந்த பல்லின அனர்த்த எச்சரிக்கை கட்டமைப்பில் உப வலய கேந்திர நிலையத்தை அமைத்தல்

தெற்காசியாவின் பிராந்திய பிரதேச ஒன்றிணைந்த பல்லின இடர் அனர்த்த எச்சரிக்கை கட்டமைப்பின் உப பிராந்திய கேந்திரத்தை இலங்கை காலநிலை திணைக்களத்தின் வளவில் அமைப்பதற்காக அமைச்சரவையினால் இதற்கு முன்னர் அங்கீககாரம் வழங்கப்பட்டிருந்தது. இருப்பினும் தற்பொழுது உள்ள இடவசதி மற்றும் நிதி பிரச்சினையின் காரணமாக உத்தேச உப வலய கேந்திரத்தை நீர்பாசன திணைக்கள வளவில் ஸ்தாபிப்பதற்கு திட்டமிடப்பட்டிருப்பதாக விவசாயம், கிராமிய பொருளாதார அலுவல்கள், நீர்ப்பாசனம் மற்றும் கடற்றொழில் நீரியல் வள அபிவிருத்தி அமைச்சரும் அரச நிருவாக இடர் முகாமைத்துவம் மற்றும் கால் நடை அபிவிருத்தி அமைச்சரும் சமர்ப்பித்த விடயங்கள் அமைச்சரவையினால் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளது.
10. அரச துறையில் நிறைவேற்று அதிகாரிகளுக்காக விசேட கொடுப்பனவை வழங்குதல்

அரச துறையில் நிறைவேற்று அதிகாரிகளுக்காக விசேட கொடுப்பனவை வழங்குவதற்காக தேசிய சம்பளம் மற்றும் ஊழியர் எண்ணிக்கை ஆணைக்குழுவினால் சமர்ப்பிக்கப்பட்ட சிபாரிசை கவனத்தில் கொண்டு அமைச்சரவைக்கு அறிக்கை ஒன்றை சமர்ப்பிப்பதற்காக அரச நிர்வாகம், இடர் முகாமைத்துவம் மற்றும் கால்நடை அபிவிருத்தி அமைச்சரின் பங்களிப்புடனும் கண்டி மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர், நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி மற்றும் எரிபொருள் வள அபிவிருத்தி அமைச்சர் ஆகியோரினால் அங்கத்துவத்துடனான அமைச்சவையின் உப குழுவொன்று 2019 மார்ச் மாதம் 26ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தினால் நியமிக்கப்பட்டுள்ளது. இதன் துணை சபையினால் சமர்ப்பிக்கப்பட்டிருந்த சிபாரிசு அமைச்சரவையினால் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளது. இதே போன்று அதிமேதகு ஜனாதிபதி அவர்களினால் நியமிக்கப்பட்ட அரசாங்க துறை சம்பள மதிப்பீடு தொடர்பாக விசேட ஆணைக்குழுவின் அறிக்கையின் மூலம் சிபாரிசு செய்யப்பட்ட அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பில் 50 சதவீதம் அதிகரித்தல். 2020 ஆம் ஆண்டு ஜுலை மாதம் 1ஆம் திகதி தொடக்கமும் எஞ்சிய 50 வீத அதிகரிப்பு 2021 ஜனவரி மாதம் 1ஆம் திகதி தொடக்கம் நடைமுறைப்படுத்தவதற்கும் அமைச்சரவையினால் 2019 செப்டெம்பர் மாதம் 10ஆம் திகதி நடைபெற்ற அதன் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டதாக அமைச்சரவையினால் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளது. இதற்கமைவாக அனைத்து அரச ஊழியர்களுக்கும் நிவாரணம் வழங்குவதை நோக்ககாக் கொண்டு சம்பள மதிப்புரை தொடர்பாக விசேட ஆணைக்குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ள சம்பளம் அதிகரிப்பில் 50 சதவீதத்தை அனைத்து அரச ஊழியர்களுக்கும் 2020 ஜனவரி மாதம் 1ஆம் திகதி தொடக்கம் வழங்குவதற்காக அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

11. புதிய கல்வி திருத்த சட்டமூலத்தை மேற்கொள்ளல்

தற்போதைய கல்வி கட்டமைப்பு பின்புலம் 1939ஆம் ஆண்டு இலக்கம் 31இன் கீழான கல்வி கட்டளைச் சட்டம் மற்றும் அதன் பின்னர் இந்த கட்டளைச் சட்டத்திற்கு ஒன்றிணைக்கப்பட்ட திருத்தம் மற்றும் விசேட சட்டங்களுக்கு உட்பட்டதாக அமைந்துள்ளது.. இதேபோன்று சட்டத்தில் அடங்கியுள்ள பெரும்பாலான விதிகள் தற்பொழுது காலம் கடந்தவை என்பதினால் அவற்றை முழுமைப்படுத்தும் நோக்கில் கல்வி அமைச்சரினால் கல்வித்துறையினதும் ஏனைய பல்வேறு துறைகளினதும் தரப்பினரின் எழுத்து மற்றும் வாய்மூலம் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் கவனத்தில் கொண்டு புதிய கல்வி சட்டம் தயாரிப்பதை கவனத்தில் கொள்ளக் கூடிய உத்தேச கட்டமைப்பு திருத்த சட்டமூலம் தயாரிக்கப்பட்டு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் புதிய கல்வி சட்டத்தை மீண்டும் மதிப்பீடு செய்வதற்கும் சிபாரிசுகளை சமர்ப்பிப்பதற்கும் கல்வி அமைச்சு மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் மற்றும் வரட்சி வலய அபிவிருத்தி அமைச்சு நகர திட்டமிடல் நீர் விநியோகம் மற்றும் உயர்கல்வி அமைச்சு, நிதி அமைச்சு, தேசிய கொள்கை, பொருளாதார அலுவல்கள், மீள்குடியமர்வு மற்றும் புனர்வாழ்வு வடமாகாண அபிவிருத்தி மற்றும் இளைஞர் அலுவல்கள் அமைச்சு மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, தேசிய மூலோபாய திணைக்களம், தேசிய கல்வி ஆணைக்குழு, தேசிய கல்வி நிறவனம் மற்றும் தனியார் நிறுவனங்களின் பிரநிதிகளைக் கொண்ட புத்திஜீவிகள் குழுவொன்றை நியமிப்பதற்கு அமைச்சரவையினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

12. காலி முகத்திடலை அபிவிருத்தி செய்தல்

இலங்கை துறைமுக அதிகார சபையினால் 2007ஆம் ஆண்டில் அமைச்சரவையின் அனுமதியுடன் நிருவக மற்றும் சமூகப் பொறுப்பு (CSR) நிதியத்தைப் பயன்படுத்தி இயற்கை நிதியம் மற்றும் தேசிய வரவு செலவு திட்ட நிதியைப் பயன்படுத்தி காலி முகத்திடலில் அமைந்துள்ள சில அபிவிருத்தி பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இதனால் உத்தேச 2019/2021 வருடங்களில் நிறுவன மற்றும் சமூக பொறுப்பு வரவு செலவு திட்டத்தின் கீழ் மதிப்பிடப்பட்ட மொத்த செலவான 300 மில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்வதற்கும் நிறுவக ரீதியில் 18 மாத காலப்பகுதிக்குள் தவணைக் கொடுப்பனவு என்ற ரீதியில் அபிவிருத்தி பணியை பூர்த்தி செய்வதற்காக துறைமுகம் மற்றும் கடல் நடவடிக்கை மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட ஆலோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

13. 1973ஆம் ஆண்டு இல 25 ஆவது விளையாட்டு துறை சட்டத்தின் 41ஆவது சரத்தின் கீழ் விளையாட்டுத் துறை அமைச்சினால் தயாரிக்கப்பட்ட கட்டளைத் தொடரை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்

தேசிய விளையாட்டு சங்க தேர்தலுக்கான மிகவும் இலகுவாகவும் நடைமுறைப்படுத்துவதற்குமான மேன்முறையீட்டு விசாரணை செய்யும் பணிகளை மேற்கொள்ளுதல் மற்றும் ஒழுங்குவிதிகளுக்கு அமைவாகவும் பொருத்தமான நபர்களை விளையாட்டு நிர்வாகத்திற்கு நியமிக்கும் நோக்கில் நிறைவேற்றுவதற்காக 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23ஆம் திகதி இலக்கம் 2137/86 என்ற அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பு மற்றும் 2019 ஆகஸ்ட் மாதம் 23ஆம் திகதி இலக்கம் 2137/85 என்ற அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில் 2 வர்த்தமானி அறிவிப்புக்களுக்கு பாராளுமன்றத்தின் அங்கீகாரத்தை பெற்றுக்கொள்வதற்காக சமர்ப்பிப்பதற்காக மின்சக்தி வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் விளையாட்டு துறை அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

14. நுவரெலியா மாவட்டத்தில் சங்கிலி பாலம் என்ற கிராமிய நீர் விநியோகத்திட்டத்தை முன்னெடுத்தல்

முல்லைத்தீவு, கிளிநொச்சி, பதுளை, மொனராகலை, இரத்தினபுரி, கேகாலை மற்றும் நுவரெலியா முதலான தெரிவு செய்யப்பட்ட 7 மாவட்டங்களில் சுகாதார பாதுகாப்பு குடிநீர் வசதி இல்லாத கிராம உத்தியோகத்தர் 540 பிரிவுகளில் குழாய் நீர் மற்றும் சுகாதார வசதிகளை மேம்படுத்துவது நீர் வள மற்றும் சுகாதார மேம்பாட்டு திட்டத்தின் (20152020) நோக்கமாகும். இதன் ஒரு பகுதியாக நுவரெலியா மாவட்டத்தில் கொத்மலை பிரதேச செயலாளர் அலுவலகத்தில் அமைந்துள்ள 14 கிராம உத்தியோகத்தர் பிரிவு பொதுமக்களுக்கு பாதகாப்பான குடிநீரை வழங்குவதற்காகவும் 2039ஆம் ஆண்டளவில் 3050 மனையலகு மக்களுக்கு பயன்களை வழங்குவதற்காக நடைமுறைப்படுத்தப்படும் சங்கிலிப்பாலம் கிராமிய நீர் விநியோகத்திற்கான திட்டத்தின் நிர்மாணப்பணிகள் அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட நிலையியற் பெறுகைக்குழுவின் சிபாரிசு செய்யப்பட்ட வகையில் M/s Q-SJV (Qingdao Savinda JV ) என்ற நிறுவனத்திற்கு வழங்குவதற்காக நகர திட்டமிடல் நீர் விநியோகம் மற்றும் உயர் கல்வி அமைச்சர் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

15. உரத்தை கொள்வனவு செய்தல் 2019 (ஒக்டோபர்)

வரையறுக்கப்பட்ட இலங்கை உர நிறுவனம் மற்றும் வரையறுக்கப்பட்ட கொழும்பு கொமர்சியல் உர நிறுவனம் ஒக்டோபர் மாதத்திற்கான உரத்தின் தேவையை பூர்த்தி செய்வதற்கு தேவையான 2,000 மெற்றிக் தொன் யூரியாவை ஒரு மெற்றிக் தொன் 299.50 அமெரிக்க டொலர்கள் வீதம் எக்றி கொமோடிரிஸ் அன்ட் பைனான்ஸ் என்ற நிறுவனத்திடமும் மியூறியேட் ஒவ் பொட்டேஸ் 8,500 மெற்றிக் தொன்னை ஒரு மெற்றித் தொன்னை 349.43 அமெரிக்க டொலர் வீதமும் எக்றி கல்சரல் ரிசோசஸ் அன்ட் இன்வஸ்மென்ட் பிரைவட் லிமிட்டெட் என்ற நிறுவனத்திடமும் அமைச்ரவையினால் நியமிக்கப்பட்ட நிலையியல் பெறுகைக்குழுவின் சிபாரிசிற்கு அமைய பெறுகையை மேற்கொள்வதற்காக உள்ளடக்க அனுமதியை பெற்றுக் கொள்வதற்கென விவசாய, கிராமிய, பொருளாதாh, அலுவல்கள் நீர்ப்பாசனம், கடற்றொழில் மற்று நீரியல் வள அபிவிருத்தி அமைச்சரினால்  சமர்ப்பிக்கப்பட்ட ஆவணத்தளிற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

16. மண்சரிவு அனர்த்தத்தை தவிர்ப்பதற்கான திட்டத்தில் சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாண வீதிகளில் 6 இடங்களில் மண் சரிவை தடுப்பதற்கான படிக்கட்டுக்களை நிர்மாணித்தல் - 02 ஆவது பொதி

வீதி அனர்த்த முகாமைத்துவ இரண்டாவது பொதியின் கீழ் சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் வீதிகளில் 6 இடங்களில் மண்சரிவை தடுக்கும் படிக்கட்டுக்களை நிர்மாணிப்பதற்கு, ஆரம்ப ஒப்பந்தத்தின் நிதியில் திருத்ததை மேற்கொள்ளல் மற்றும் அம்பேபுஸ்ஸ, ஹப்புத்தளை, பண்டாரவளை, உடுவர மற்றும் எல்ல ஆகிய பிரதேசங்கில் அடையாளம் காணப்பட்ட பகுதிகளில் மண்சரிவை தவிர்ப்பதற்பாக படிக்கட்டுக்களை நிர்மாணித்தல். தற்போதைய ஒப்பந்தகாரரான RR- Soltec Joint Venture என்ற நிறுவனத்திடம் வழங்குவதற்காக நெடுஞ்சாலைகள், வீதி அபிவிருத்தி மற்றும் கனியவள அபிவிருத்தி அமைச்சர் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

17. அராபிய பொருளாதார அபிவிருத்திக்கான குவைத் (KFAED) நிதியத்தினால் நிதி வழங்கப்படும் 25 ஷஷபாலங்களை நிர்மாணிப்பதற்கான திட்டம்' சிவில் வேலைத்திட்டத்திற்கான ஒப்பந்தகாரருக்கு பெறுகையை வழங்குதல்.

அராபிய பொருளாதார அபிவிருத்திக்கான குவைத் நிதியம் (KFAED) வழங்கிய நிதியில் 25 பாலங்களை மீள் அமைப்பதற்கான திட்டத்தில் இரண்டாவது பொதியின் கீழ் சப்ரகமுவ மாகாணத்தின் தேசிய பெருந்தெருக்கள் வலைப்பின்னலில் நிலவும் சேதம் அடைந்த மற்றும் குறுகிய 9 பாலங்களை மீள நிர்மாணிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கு அமைவாக தெஹ்ஓபிற்ற தரணியகலை வீதியில் 5 பாலங்களும், கலிகமுவ ருவான்வெல்ல வீதியில் 2 பாலங்களும், கேகாலை பொலத்கோ பிட்டிய மற்றும் மாவனல்ல ஹேம்மாத்தம ஆகிய வீதிகளில் ஒரு பாலமும் என்ற அடிப்படையில் மீள நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தம் அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட நிலையியல் பெறுகைக்குழுவின் சிபாரிசுக்கு அமைய M/s  ELS Construction (Pvt) Ltd  என்ற நிறுவனத்திடம் 1289.76 மில்லியன் ரூபாவிற்கு வழங்குவதற்காக பெருந்தெருக்கள் மற்றும் வீதி அபிவிருத்தி மற்றும் கனியவள அபிவிருத்தி அமைச்சர் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

18. பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய நுழைவாயிலில் பயணப் பொதிகளிற்குள் வெடிபொருட்களை அடையாளம் காண்பதற்கான கட்டமைப்பை வழங்குதல், ஸ்தாபித்தல் மற்றும் கையளித்தல்

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விமானத்திற்கு பிரவேசிக்கும் நுழைவாயில் பகுதியில் பயணப் பொதிகளை பரிசோதனை செய்வதற்காக பயன்படுத்தப்படும் எக்ஸ்ரே பரிசோதனை இயந்திரம் 2004 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. இந்த இயந்திரத்தில் கோளாறு ஏற்படுகின்றமை விமான தாமதத்திற்கு காரணமாக அமையக்கூடும். இதனால், விமான சேவை பாதுகாப்பு தரத்திற்கு அமைவானது என்பதை உறுதி செய்வதற்காகவும், வெடி பொருட்களை அடையாளம் காண்பதற்காகவும், அதனுடன் தொடர்புபட்ட பாதுகாப்பு தேவைக்காகவும் தற்பொழுது பயன்படுத்தப்படும் எக்ஸ்ரே பரிசோதனை கருவிக்கு பதிலாகவும், பழமைவாய்ந்த இயந்திரத்திற்கு பதிலாகவும், கணனி டெமோக்கிரப்பி (CT) ரகத்தை சேர்ந்த நுழைவாயில் பகுதியில் பயணப் பொதிகளை பரிசோதனை செய்வதற்காக பயன்படுத்தப்படும் எக்ஸ்ரே இயந்திரத்தை மாற்றுவதற்காக விமான நிலையம் மற்றும் விமான சேவை இலங்கை நிறுவனத்தின் நிதியை பயன்படுத்தி அவசர பெறுகை விதிமுறைகளின் கீழ் சம்பந்தப்பட்டவற்றை கொள்வனவு செய்வதற்கான பணிகளை ஆரம்பிப்பதற்காக போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் வழங்கிய ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

19. இலங்கை துறைமுக அதிகார சபைக்காக கப்பலில் இருந்து தரை வரையில் நடவடிக்கை மேற்கொள்ளும் மேலதிக கிரைன் இற்கான பெறுகையை மேற்கொள்ளல்.

கப்பலில் இருந்து தரை வரையில் மேற்கொள்ளும் 03 கிரைன் ஜயபஹாலு பிரிவில் (V) கட்டத்தில் கொள்கலன் ஜெட்டிக்காக விநியோகித்தல், ஸ்தாபித்தல் மற்றும் செயற்பாடுகளை வெளிப்படுத்துவதற்கான ஒப்பந்தத்தில் M/s Shanghai – Zhenhua Heavy Industries என்ற நிறுவனத்திடம் வழங்குவதற்கு இதற்கு முன்னர் அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்தது. இதற்கு அமைவாக அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட பெறுகைக் குழுவின் சிபாரிசிற்கு அமைய மேலே குறிப்பிடப்பட்ட ஒப்பந்தத்தில் ஒழுங்குறுத்தல், நிபந்தனை செலுத்தும் விதிமுறைக்கு அமைவாக 2006 ஆம் ஆண்டு அரசாங்கத்தின் பெறுகை வழிகாட்டல் விதிகளுக்கு அமைவாக கொள்வனவு செயற்பாடுகளை முன்னெடுத்து கப்பலில் இருந்து தரை வரையில் நடவடிக்கை மேற்கொள்வதற்காக மேலதிக கிரைன்களை கொள்வனவு செய்வதற்கான ஒப்பந்தத்தை M/s Shanghai – Zhenhua Heavy Industries என்ற நிறுவனத்திடம் வழங்குவதற்காக துறைமுக மற்றும் கடல் நடவடிக்கைகள் மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top