அரசு ஊழியர்களின் சம்பளம்
3,000 முதல் 24,000 ரூபா வரை அதிகரிப்பு

ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட விசேட சம்பள ஆணைக்குழுவின் பரிந்துரையின் படி 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் அனைத்து அரசு ஊழியர்களின் மாத சம்பளம் 3 ஆயிரம் ரூபா முதல் 24 ஆயிரம் ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

நிதி அமைச்சு அறிக்கை ஒன்றை  வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளது.

இது, 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அரச ஊழியர் ஒருவரின் அடிப்படை சம்பளமானது, 2015 ஆம் ஆண்டில் அவரது அடிப்படை சம்பளத்தில் 107 சதவீத சம்பள அதிகரிப்பாகும்.

இந்த சம்பள அதிகரிப்பின் ஊடாக அரச சேவையின் பல்வேறு துறைகளில் காணப்பட்ட சம்பள முரண்பாட்டு பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கக்கூடும் என குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சம்பள முரண்பாட்டை தீர்த்துக் கொள்வதற்கு தேவையான பரிந்துரைகளை முன்வைப்பதற்கு எஸ்.ரனுக்கேவின் தலைமையில் கீழ் 11 பேர் அடங்கிய சம்பள மறுஆய்வு ஆணையம் ஒன்று ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டது.

இதன் பிரதிபலனாக அரச துறையில் அனைத்து ஊழியர்களினதும் சம்பள 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தொடக்கம் மேலும் அதிகரிக்கும் நிலையில், விசேடமாக ரயில் மற்றும் தபால் சேவைகளில் உள்ள வேதன முரண்பாடுகள் இதனூடாக தீர்க்கப்படும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Salary Code
Designation Group
2015 Basic Salary Rs
Basic Salary  by the January 2020
Rs
The Basic salary to be received on the recommendation of the new salary commission
Rs
PL I
Primary Level unskilled
11,730/=
24,250/=
27,250/=
MN II
Management Asst.
13,990/=
28,940/=
33,260/=
MN IV
Associate Officer
15,215/=
31,490/=
36,530/=
SL I (III)
Executive
22,935/=
47,615/=
57,200/=
Ministry Secretary
Ministry Secretary
47,515/=
98,650/=
122,625/=
*TL
Technical (For CGR)
-
-
36,095/=




0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top