அடிக்கல் நாட்டுதல், திறந்து வைத்தலுக்கு தடை
இடமாற்றங்களும் செய்யக்கூடாது
தேர்தல் ஆணைக்குழு உத்தரவு
ஜனாதிபதித் தேர்தலுக்கு
பாதிப்பு ஏற்படும்
வகையில் அரச
நிறுவனங்களில் எந்தவித இடமாற்றங்களையும் மேற்கொள்ளக் கூடாதென
தேர்தல் ஆணைக்குழு
பொதுநிர்வாக, முகாமைத்துவ மறுசீரமைப்பு அமைச்சை கேட்டுக்கொண்டுள்ளது.
அதேவேளை, ஜனாதிபதி
தேர்தலுக்கான வாக்களிப்பு நிறைவுறும் வரை அரச
சொத்து மற்றும்
அரசாங்க நிகழ்வுகளை
உபயோகித்து அரசியல்வாதிகளை பிரபலப்படுத்தும்
நடவடிக்கைகளும் தடை செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு
தெரிவித்துள்ளது.
இதற்கிணங்க,
அரசாங்க மாகாண சபை மற்றும்
உள்ளூராட்சி நிறுவனங்களில் மக்கள் நிதியை உபயோகப்படுத்தி
அடிக்கல் நாட்டுதல்,
திறந்து வைத்தல்
மற்றும் செயற்
திட்டங்களை மக்களுக்கு கையளித்தல் போன்ற நிகழ்வுகளில்
அரசியல்வாதிகளை முன்னிறுத்தி செயற்படுவதும்
தடை செய்யப்பட்டுள்ளதாகவும்
ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில்
மக்கள் தமக்கு
முறைப்பாடு செய்ய முடியும் என்றும் ஆணைக்குழு
கேட்டுக்கொண்டுள்ளது.
இடமாற்றங்களின்போது மாவட்டச் செயலாளர்கள் மற்றும் கிராமசேவை
அதிகாரிகள் இடமாற்றம் பெறாது தற்போது கடமையாற்றும்
இடத்திலேயே தொடர்ந்தும் அவர்கள் பணிபுரிவதற்கு நடவடிக்கை
எடுக்குமாறும் ஆணைக்குழு பொதுநிர்வாக அமைச்சைக் கேட்டுக்கொண்டுள்ளது.
அத்துடன் ஓய்வுபெறவுள்ள
மாவட்ட செயலாளர்களுக்கு
சேவை நீடிப்பை
வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் ஆணைக்குழு கேட்டுக்கொண்டுள்ளது.
0 comments:
Post a Comment