மதநல்லிணத்திற்கு
எடுத்துக்காட்டாக
ஹிந்து கோவிலை பராமரிக்கும்
முஸ்லிம் முதியவர்
அசாமில்
சிவன் கோவிலை
முஸ்லிம் முதியவர்
ஒருவர் பராமரித்து
வருகிறார். இவரது குடும்பத்தினர் பரம்பரை பரம்பரையாக
இப்பணியை மேற்கொண்டு
வருகின்றனர் என்ற தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
எமது அண்டை நாடான இந்தியாவிலுள்ள அசாம் மாநிலம்
கவுகாத்தி அருகே
பிரம்மபுத்ரா நதிக்கரையில் அமைந்துள்ள சிவன் கோவிலை,
முஸ்லிம் முதியவர்,
மோதிபர் ரஹ்மான்(73)
பராமரித்து வருகிறார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
கோவிலை
சுத்தம் செய்வது
முதல், விளக்கு
ஏற்றுவது வரை
அனைத்து பணிகளையும்
அவரே மேற்கொள்கிறார்.
சிவபெருமானை 'நானா' என அன்புடன் அழைக்கும்
அவர், மதநல்லிணத்திற்கு
எடுத்துக்காட்டாக வாழ்ந்து வருகிறார் எனக் கூறப்படுகின்றது.
இதுகுறித்து
மோதிபர் ரஹ்மான்
கூறியிருப்பதாவது:
எனது
மூதாதையர் ஒருவரின்
கனவில் தோன்றிய
சிவபெருமான் கேட்டுக் கொண்டதன்படி, பரம்பரை பரம்பரையாக
கோவிலை பராமரிக்கும்
பணியை செய்து
வருகிறோம். சுமார் 500 ஆண்டுகளாக எனது குடும்பத்தார்
இப்பணியை மேற்கொண்டு
வருகின்றனர். என் 'நானா'(சிவன்) தூய்மையை
விரும்புபவர் என்பதால் கோவிலை தூய்மையாக வைத்துக்
கொள்வேன். எனக்கு
பின் இப்பணியை
என்மகன்கள் மேற்கொள்வார்கள். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment