"2050இல் சாய்ந்தமருது"
தொடர்பான பார்வை.
Vision For Sainthamaruthu in 2050



1.வீடமைப்பும் உட்கட்டமைப்பும்

1:1: பத்தாயிரம் புதிய வீடுகளும் இருபது தொடர்மாடி மனைகளும்.

1:2: அகலமான வீதிகளும் நவீன பஸ் நிலையங்களும்,வாடகை வாகனங்கள் தரிப்பிடங்களும். இவற்றைப் பராமரிக்கவும் ஒழுங்கு படுத்தவும் வீதிக் கமிட்டிகள்.

1:3: வீடுகள் / மனைகள் தேவைப்படுவோருக்கு வாங்குவதற்கு அல்லது வாடகைக்குப் பெற வசதிகள்

1:4: பெற்றோர் தமது பெண் பிள்ளைகளுக்கு சீதனமாக வீடு கட்டிக்கொடுக்கும் வழக்கம் ரத்து.

1:5:வேலைக்குச் செல்வோரின் குழந்தைகளுக்கான பகல் நேர பராமரிப்பு நிலையங்கள்.

1:6: மாற்றுத் திறனாளிகளுக்கான பகல் நேர பராமரிப்பு நிலையம்

1:7: முதியோருக்கான பகல் நேர பராமரிப்பு நிலையம்.

1:8: அனாதைகள் பராமரிப்பு நிலையங்கள்

1:9: இளைஞர் நல நிலையங்கள்

1:10: பெண்கள் நல நிலையங்கள்

1:11: பூந்தோட்டங்கள். ( சிறுவர், பெரியோர், முதியோர்களுக்கான நவீன வசதிகளுடன்)

1:12: நவீன விளையாட்டு மைதானங்கள் ( பார்வையாளர் அரங்கு, பயிற்சி வசதிகள் உட்பட)

1:13: நவீன கழிவகற்றல் செயற்திட்டம் (இலவச சேவைக்குப் புறம்பாக கட்டணத்துடன் விசேட சேவை)

1:14: நவீன வசதிகளுடன் மின்சார, நீர் விநியோகம்

2.ஆரோக்கியமும் சுகாதாரமும்

2:1: முழுமையான சேவை வழங்கும் நவீன வைத்திய சாலை
2:2: நவீன அம்புலன்ஸ் சேவையும் நோயாளரை வீட்டிற்குச் சென்று கவனிக்கும் வசதிகளும்
2:3: சுற்றாடல் சுகாதாரத்தைப் பேண நவீன செயற்பாடுகள்
2:4: நவீன பொதுச் சுகாதாரக் கவனிப்புகளும் நோய்த்தடுப்பு வசதிகளும்.
2:5: நவீன பிரத்தியேக மருத்துவ மனைகளும் மருந்து மற்றும் உபகரணங்கள் விற்பனை நிலையங்களும்.
2:6: போதை வஸ்துகள், குடி வகைகள் பாவனை, புகைத்தல் என்பன அறவே இல்லாத பிரதேசமாக மாற்றம்.

3. உணவு,உடை,மற்றும் அவசிய பொருட்கள்
3:1: நவீன சுபர் மார்கட்கள்.
3:2: வீடுகளுக்கு பொருட்கள் விநியோக வசதிகள்
3:3: உணவுப் பொருட்கள், உடைகள், பாதணிகள், ஆபரணங்கள் போன்றவற்றை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள்.
3:4: உல்லாசப் பயணிகளைக் கவரக்கூடிய ஹோட்டல்கள்.
3:5: திருமண/கூட்ட மண்டபங்கள்

4: கல்வி, சமயம், கலாசாரம்.
4:1: பூரணத்துவமான பாடசாலைகள்
4:2: ஆசிரியர் நிலையங்கள் & கல்விக் காரியாயங்கள்
4:3: பூரணத்தவமான நூலகங்கள்
4:4: தொன்மை பேசும் நூதன சாலை
4:5: சிறப்பாகப் பரிபாலிக்கப்படும் பள்ளி வாசல்களும் மதரசாக்களும்.
4:5: கலாசாரம், பண்புகளை வளர்க்கவும் பள்ளிவாசல்கள் மதரசாக்களை வழிநடத்தவும் கூடிய ஷூரா சபை.

5: தொழில் துறை/ வருமானம்

5:1: மீளமைக்கப்பட்ட விவசாய சேவை நிலையங்கள்.
5:2: மீளமைக்கப்பட்ட மீனவர் நிலையங்களும் நவீன படகுத் துறைகளும்.
5:3: உணவுக்காக ஆடு,மாடு, கோழி வளர்க்கும் பண்ணைகள்.
5:4: மிருக வைத்தியர் நிலையம்.
5:5: பாதுகாப்பனதும் துப்பரவானதுமான கொல்களங்கள்.
5:6: கட்டடத் தொழிலாளர் மற்றும் உற்பத்தியாளருக்கான தகவல் மையம்
5:7: போக்குவரத்து ஊழியர்களுக்கான தகவல் மையம்
5:8: வர்த்தக சங்கத்தின் தகவல் மையம்..
5:9: அரச சேவையாளர் தகவல் மையம்.
5:10: உயர் தொழில் துறையினர் தகவல் மையம்
5:11: ஓய்வூதியர் மற்றும் சிரேஷ்ட பிரஜைகள் மையம்
5:12: தொழில் நுட்ப அபிவிருத்திக்கான தகவல் நிலையம்
5:13: தோணா மற்றும் கரைவாகு ஆறுபோன்ற நீர் நிலைகள் அபிவிருத்தி செய்யப்பட்டு படகோட்டம் மற்றும் நிகழ்ச்சிகள். நீர் நிலை நெடுகிலும் நிழல் மரங்கள் நட்டு
உல்லாசப் பயணிகளைக் கவரவும், உள்ளூர் மக்களின் பொழுது போக்குக்கும் உதவும் மையம்.
தோணாவை உப்பு உற்பத்தி, இறால் வளர்ப்பு போன்ற பொருளாதார அபிவிருத்திக்குப் பயன் படுத்தல்.

6: அனர்த்த முகாமையும் ஜனாஸா சேவையும்

6:1: எல்லாவித அனர்த்தங்களின் போதும் உடனடியாகச் செயற்படக்கூடியதும் ஜனாசா நல்லடக்கத்திற்கு உதவக்கூடியதுமான பூரணத்துவமான மத்திய நிலையம்.

6:2: அனர்த்தத்தின்போது இடம் பெயர்பவர்களுக்கான இடைத்தங்கல் முகாம்களுக்கு அவசியமான கட்டடங்கள்/ பொருட்கள் தயார் நிலையில்.
6:3: அனர்த்தத்தின் போது அவசியமான வாகனங்கள், இயந்திரங்கள், உபகரணங்கள் மற்றும் தீயணைக்கும் சேவை தயார் நிலையில்.
6:4: சாய்ந்தமருதில் உள்ள எல்லா மையவாடிகளுக்கும் குழுக்கள் அமைக்கப்பட்டு மையவாடிகளைத் துப்பரவாகவும் அழகாகவும் வைத்திருப்பதற்கும் ஜனாசாக்கள் அடக்குவதில் உதவுவதற்கும் பொறுப்பாய் இருத்தல்.
6:5: ஜனசா நலன்புரி அமைப்பு செயற்படல்.

7: வறுமை ஒழிப்பு
7:1: மேம்படுத்தப்பட்ட பைத்துஸ் ஸகாத் செயற்பாடுகள் மூலம் வறியோருக்கு உதவுதல்.
7:2: யாசகம் கேட்போரை ஊக்கப்படுத்தாது யாசகம் கேட்பதை ஊரில் இல்லாதொழிக்க நடவடிக்கை.

8. நற்பண்புகளும் மனித நேயமும்
8:1: மக்கள் பொறுமை, உண்மை, அன்பு போன்ற நற்பண்புகள் கொண்டவர்களாக இருத்தல்.
8:2: சமூகத்தில் குடும்பங்களுக்கு மத்தியிலும் அயலவர் மத்தியிலும் ஒற்றுமை காணப்படுதல்.
8:3: சட்டம்,ஒழுங்கு,மனித உரிமைகளை மதித்தலும் விட்டுக்கொடுத்து வாழ்தலும்.
8:4: சுற்றாடல் சுகாதாரத்தைப் பேணுவதில் ஒத்துழைத்தல்.
8:5: மக்கள் பெரியோரைக் கனம் பண்ணி மதிப்பவர்களாகவும் சிறுவர்களுக்கு அன்பு செலுத்துபவர்களாகவும் இருத்தல்.
8:6: வசதி வாய்ப்புள்ள மக்கள் நலிவுற்றவர்களுக்கும் வறியவர்களுக்கும் உதவி செய்ய முன்வருதல்.

9. கலை நிகழ்ச்சிகள்
9:1: பாரம்பரிய மற்றும் நவீன கலை நிகழ்ச்சிகள் மூலம் மக்கள் மத்தியில் அமைதியையும் ஒற்றுமையையும் வளர்த்தல்.
9:2: கலை நிகழ்ச்சிக்கான மையம் செயற்படல்.

10.ஊடகம்
10:1: நேர்மையான/ பொறுப்பு வாய்ந்த/நாட்டுப் பற்றுள்ள/ புத்தி சாலித்தனமான ஊடகவியலாளர்கள் செயற்படல்.
10:2: ஊடகவியலாளர் தகவல் மையம் செயற்படல்

Dr.M.I.M.Jameel
President
Council of Senior Citizens
Sainthamaruthu

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top