இலவசக் கல்வியின் தந்தை
- 50 வது நினைவு தின தேசிய வைபவம்



இலங்கையின் இலவசக் கல்வியின் தந்தையான சி.டபிள்யு.டபிள்யு.கன்னங்கரவின் 50வது நினைவு தின தேசிய வைபவம் தொலங்கமுவடட்லி சேனாநாயக்க மத்திய மகா வித்தியாலயத்தில் எதிர்வரும்23ம் திகதி  காலை 9.00 மணிக்கு இடம் பெறவுள்ளது.  அகில இலங்கை மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்கம் இதனை ஏற்பாடு செய்துள்ளது.

1884ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 13 ஆம் திகதி அம்பலாங்கொட ரந்தோம்பே என்ற கிராமத்தில் பிறந்த கன்னங்கர, செல்வந்தர்களுக்கு மாத்திரம் உரித்தாக இருந்த கல்வியை சாதாரண மக்களும் கற்பதற்கான நடவடிக்கையை மேற்கொண்டார்.

இதன் காரணமாக,ஆரம்பக் கல்வி தொடக்கம் பல்கலைக்கழகம் வரையிலான இலவசக் கல்விக்கு அவர் வழி வகைசெய்ததுடன் . இலவசக் கல்விச் சட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கும் நடவடிக்கைமேற்கொண்டார்.

நாட்டில் உள்ள சகல தேர்தல் தொகுதிகளையும் உள்ளடக்கிய வகையில், 54 மத்திய கல்லூரிகளை ஆரம்பித்து நாட்டின் கல்வித் துறையில் பாரிய புரட்சியை ஏற்படுத்துவதற்கு சி.டபிள்யு.டபிள்யு.கன்னங்கர பாரிய பணியை ஆற்றினார். இதன் காரணமாக கிராமத்தில் உள்ள வறிய பெற்றோரின் பிள்ளைகள் புத்திஜீவிகளாக மேம்பட்டு நாட்டிலும், வெளிநாடுகளும் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றுகின்றனர். இதே போன்று தனியார் நிறுவனங்களிலும் வர்த்தக மற்றும் தொழிற்றுறைகளிலும் இவர்கள் இன்று முன்னிலை வகிக்கின்றனர்.

 1969ம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 23ம் திகதி சி.டபிள்யு.டபிள்யு.கன்னங்கர காலமானார். அவரை நினைவு கூரும் வகையில் ஒவ்வொருவருடமும் 54 மத்திய கல்லூரிகளில் அவரது நினைவாக வைபவங்கள் நடத்தப்படுகின்றன.

இம்முறை தொலங்கமுவ டட்லி சேனாநாயக்க மத்திய மகாவித்தியாலத்தில் பழைய மாணவர் சங்கம்இந்த நினைவுதினத்தை ஏற்பாடு செய்துள்ளது. அன்றைய தினம் சி.டபிள்யு.டபிள்யு.கன்னங்கரநினைவு தின உரையை இந்தக் கல்லூரியின் பழைய மாணவரான பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத்பூஜித்த நிகழ்த்த உள்ளார். 


0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top