எந்த
நிபந்தனைக்கும்
நான்
அடி பணியமாட்டேன்!
சஜித்
தெரிவிப்பு
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக எந்தவொரு
நிபந்தனைக்கும் நான் அடி பணியமாட்டேன் என அமைச்சர் சஜித் பிரேமதாஸ
தெரிவித்துள்ளார்.
மத்துகம பிரதேசத்தில் நடைபெற்று வரும் மக்கள் சந்திப்பின்
போது சற்று முன்னர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,
அனைத்து மக்களினதும் வாழ்க்கையை மாற்றுவதற்கு நான் புதிய
அரசாங்கம் ஒன்றை உருவாக்குவேன். நான் நிபந்தனைகளுடன் ஜனாதிபதி வேட்பாளராகியுள்ளதாக
கூறுகின்றார்கள்.
நேற்று வெளியாகிய செய்தி ஒன்றின் மூலம், சஜித் பிரமேதாசவுக்கு நிபந்தனையுடன் வேட்புரிமை
வழங்கப்பட்டுள்ளதாக பிரச்சாரம் செய்யப்பட்டது.
நான் நாட்டை குறித்தும் மக்களை குறித்தும் சிந்தித்தே
அரசியலுக்கு வந்தேன். சஜித் பிரேமதாஸ என்பவர் கைப்பொம்மை அல்ல. சஜித்
பிரேமதாஸவுக்கு மனம், மூளை, உடல் என தனித்தனியாக உள்ளது.
நான் நிபந்தனையுடனான அரசியலுக்கு எந்தவொரு சந்தர்ப்பத்திலும்
தயார் இல்லை என்பதனை தெளிவாக கூறிக்கொள்கின்றேன்.
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட நான் நாட்டுப் பற்றுடனேயே
தீர்மானத்தை எடுத்தேன். சஜித் பிரேமதாச என்பவர் யாருடைய கைப்பாவையும் அல்ல.
சஜித்துக்கே உரித்தான மனம் ஒன்று இருக்கின்றது.
என்னுடை எண்ணங்கள் நடைமுறைகள் செயற்பாடுகள் போன்றவைற்றை
எனது இதயமே செயற்படுத்துகின்றது.
நான் எந்த நிபந்தனைகளுக்கும் உட்பட்டு அரசியலை
முன்னெடுக்கப்போவதில்லை. நிபந்தனைகளுக்கு உள்ளாகி பயந்த ஒரு கோமாளியாக ஆட்சி
செய்வதற்கு ரணசிங்க பிரமேதாசவின் மகன் ஒருபோதும் தயாரில்லை.
இந்த நாடு பொம்மையாக செயறப்ட்ட காலம் மலையேறி விட்டது.
எமக்கு முன் எமது தாய் நாடு என்ற அடிப்படையில் நாம் ஆட்சி புரிவோம்.
எனக்கு எதாவது பதவிகள் கிடைப்பதாக இருந்தால் அதனை நான்
நாட்டு மக்களின் நலன் கருதி எனது கோட்பாட்டுக்கமைய பெற்றுக் கொள்வேன். எனக்கு
எவரும் சந்தர்ப்பம் வழங்காவிட்டால் நான் அது குறித்து கவலைப்பட மாட்டேன்.
வரலாற்றில் எவ்வித நிபந்தனைகளுக்கும் உட்படாமல்
போட்டியிடும் ஒரு வேட்பாளராக நான் இருப்பேன்.
எனது குடும்பம் என்னை செயற்படுத்தவில்லை, பரம்பரை செயற்படுத்தவில்லை எனது குடும்பம்
நீங்களே, எனது சகோதரர்
மற்றும் உறவினர்களும் நீங்களே.
எனது நணப்ர்கள் வேறு யாரும் அல்ல இந்த நாட்டிலுள்ள
கோடிக்கணக்கான மக்களே. அவர்களே எனது உறவினர்கள். பயப்பட வேண்டிய அவசியமில்லை என
குறிப்பிட்டுள்ளார்.
0 comments:
Post a Comment