கஷோகி கொலைக்கு பொறுப்பேற்கிறேன்:
சவூதி இளவரசர்



வூதி பத்திரிகையாளர் ஜமால் கஷோகி கொலை சம்பவம், தனது கண்காணிப்பின் கீழ் நடந்ததால், அதற்கு பொறுப்பு ஏற்று கொள்வதாக சவூதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் கூறியுள்ளார்.

சவூதி அரேபியாவைச் சேர்ந்தவர், ஜமால் கஷோகி, 60. பத்திரிகையாளரான இவர், அமெரிக்காவில் இருந்து வெளியாகும், 'வாஷிங்டன் போஸ்ட்' பத்திரிகையில், சவூதி அரேபிய அரசை விமர்சித்தும், அந்நாட்டு மன்னர் சல்மானை கண்டித்தும், பல கட்டுரைகள் எழுதி உள்ளார்.

துருக்கியின், இஸ்தான்புல் நகரில் உள்ள, சவூதி அரேபிய தூதரகத்திற்கு, கடந்த, 2018ம் ஆண்டு அக்., 2ல் தனது காதலியை திருமணம் செய்யும் பொருட்டு ஜமால் கஷோகி, சென்றார். இதன் பின், அவரை காணவில்லை.

பத்திரிகையாளர் ஜமால் கஷோகியை கொடூரமாக கொலை செய்து, உடலை, சவூதி அரேபிய அரசு அதிகாரிகள் அழித்து விட்டதாக, துருக்கி அரசு குற்றஞ்சாட்டியது. இதற்கான ஆதாரத்தையும், துருக்கி வெளியிட்டது.ஆனால், முதலில், 'இந்த விவகாரத்தில் எங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை' எனக் கூறிய சவூதி அரேபிய அரசு, பின்னர், ஜமால் கஷோகி கொலை செய்யப்பட்டதை ஒப்புக் கொண்டது. மேலும், 'தூதரகத்தில், ஜமால் சந்திக்கச் சென்ற நபருக்கும், அவருக்கும் மோதல் ஏற்பட்டது. இதில், ஜமால் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக, 18 பேர் கைது செய்யப்பட்டனர்' என, சவூதி அரேபிய அரசு தெரிவித்தது. இதற்கு, பல நாட்டு தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

இந்நிலையில், சவூதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானிடம், அமெரிக்காவின் பொது ஒலிபரப்பு சேவை நிறுவனம் பேட்டி கண்டு ஆவணப்படம் ஒன்றை தயாரித்துள்ளது. இது அக்., 1ல் ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. இந்த ஆவணப்படத்திற்கான முன்னோட்டமாக சில காட்சிகள் வெளியிடப்பட்டன.

அந்த வீடியோ காட்சிகளில், முகமது பின் சல்மான், கஷோகி கொலை சம்பவம் எனது கண்காணிப்பில் தான் நடந்தது. எனது கண்காணிப்பின் கீழ் நடந்ததால், அந்த கொலை சம்பவத்திற்கான முழு பொறுப்பையும் ஏற்கிறேன் என தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top