இலங்கை ஜமாஅதே இஸ்லாமி,
மற்றும் அகில இலங்கை ஜம் இய்யதுல் உலமாசபை
 ஆகியோரை நோக்கி இந்தப் பதிவு

ஒரு சட்டத்தரணிக்கு அநீதி இழைக்கப்பட்டபோது இரண்டு மாகாணங்களின் ஒட்டுமொத்ட நீதித்துறையினை ஒரு நாளைக்கு முடக்கி, அவர்கள் தமது கண்டனங்களை வீதிக்கு இறங்கி முன்வைத்திருக்கின்றார்கள்.

ஒரு அமைப்பின் 24 வருடங்களுக்கும் அதிகமான காலம் தலைவராக கடமையாற்றிய ஒருவர், இலங்கை முஸ்லிம் சமூகத்தினால் நன்கு அறியப்பட்ட ஒரு ஆலிம், ஒரு பிரபல மார்க்க அறிஞர் எவ்விதக் குற்றச்சாட்டுக்களுமின்றி, அநியாயமான முறையில் சட்டவிரோதமான முறையில் கைது செய்யப்பட்டு இன்றுவரை தடுத்துவைக்கப்பட்டிருக்கின்றார். உங்கள் விசுவாசத்தை, அநீதிக்கு எதிரான உங்கள் குரல்களை ஒரு வெள்ளைக் காகிதத்தில் ஒரு அறிக்கையாக வெளியிட்டதோடு நிறுத்திக்கொண்டீர்களே…. உங்களை என்னவென்று சொல்வது? உலகில் உள்ள எல்லாக் கெட்டவார்த்தைகளையும் திரட்டியெடுத்து வைதாலும் அது தகும்

இலங்கை ஜமாஅதே இஸ்லாமி அமைப்பினரே நீங்கள் என்ன சட்டவிரோதமான அமைப்பினரா?? அநீதிக்கெதிரான உங்கள் போராட்டங்களை முயற்சிகளை ஏன் இன்றூவரை பின்கதவுகளால் நகர்த்துகின்றீர்கள், அதன் தலைவர் செயலாளர் உட்பட எவருமே இதுவரை பொதுவெளிக்கு வராமைக்கான காரணம் என்ன???

இலங்கையின் முஸ்லிம் சமூக அமைப்புக்களே இதன் பின்னரும் நீங்கள் இலங்கை முஸ்லிம் சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றோம் என்ற பெனரோடு வெளியில் வந்தால் இலங்கை முஸ்லிம் சமூகம் உங்களுக்கு ஒரு சிறப்பான பாடத்தைப் புகட்டும்

.அஸ்மின் 25-09-2019






0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top