சீனாவில் அறிகுறி இன்றி
மீண்டும் பரவும் 'கொரோனா' தொற்று
சீனாவில், 'கொரோனா' தொற்று பெரும்
அளவில் கட்டுக்குள் வந்துவிட்ட நிலையில், எந்தவித அறிகுறியும் இல்லாமலேயே, 1,300 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது,
மக்கள் மத்தியில்
மீண்டும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்றுக்கு, 3,318 பேர் பலியாயினர். நேற்று முன் தினம் வரை,
81 ஆயிரத்து 589 பேர்,
பாதிக்கப்பட்டுள்ளதாக,
அந்நாட்டு தேசிய சுகாதார
கமிஷன் தெரிவித்திருக்கிறது.
அந்நாட்டில், வைரஸ் தொற்று பெரும் அளவில் கட்டுக்குள் வந்துவிட்ட
நிலையில், வெளிநாட்டில்
இருந்து சீனா வந்த 35 பேருக்கு, கொரோனா தொற்று, நேற்று முன்
தினம் உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம், வெளிநாட்டில் இருந்து, கொரோனா தொற்றுடன் சீனா வந்தவர்களின் எண்ணிக்கை,
841 ஆக உயர்ந்தது.
இதற்கிடையே, எந்தவித அறிகுறியும் இல்லாமலேயே, சிலருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஹுபய் மாகாணத்தில், நேற்று முன்தினம்,
37 பேருக்கு, தொற்று உறுதியானது. இவர்கள் அனைவருக்கும்,
கொரோனா அறிகுறிகள்
எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி அறிகுறிகள் இல்லாமலேயே, தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை,
1,300 ஆக உயர்ந்துள்ளது.
இது, சீன மக்கள் இடையே,
பீதியை ஏற்படுத்தி
உள்ளது.
அறிகுறிகள் இல்லாவிட்டாலும், அவர்களிடம் இருந்தும், தொற்று வேகமாக பரவும் அபாயம் இருப்பதால்,
அவர்கள் அனைவரையும்,
14 நாட்கள், கட்டாயமாக தனிமைபடுத்த, சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
கொரோனா வைரஸ், விலங்குகளிடம் இருந்து, மனிதர்களுக்கு பரவியதாக, சீன ஆராய்ச்சியாளர்கள் கூறியதை அடுத்து,
நாய் மற்றும் பூனை
உள்ளிட்ட பிராணிகளை சாப்பிட தடை விதித்து, சீனாவின் ஷென்ஸென் நகர நிர்வாகம், உத்தரவிட்டுள்ளது.
0 comments:
Post a Comment