அமெரிக்காவில் வேலை கேட்டு
66 லட்சம் பேர் பதிவு
அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பாதிப்பிலும் கடந்த மார்ச் 28
ஆம் திகதியுடன் முடிவடைந்த வாரத்தில் 66 லட்சத்து 48 ஆயிரம் பேர் வேலைக்கு பதிவு
செய்துள்ளதாக அந்நாட்டு தொழில் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கெரோனா வைரஸ் பரவல் நெருக்கடியால் அந்நாட்டு
பொருளாதாரத்தையே மூடி மறைத்துள்ளது. கடந்த வாரத்திற்கு முன்னர் 30 லட்சம் பேர்
தான் வேலை கேட்டு பதிவு செய்திருந்தனர். கடந்த வெள்ளிக்கு பிறகு இரண்டு மடங்காக
உயர்ந்து 66 லட்சம் பேர் பதிவு செய்திருப்பது தெரியவந்துள்ளது.
அரசின் கட்டாய பாதுகாப்பு முகாம்களுக்காக ஆயிரக்கணக்கான
வணிகங்களை மூட கட்டாயப்படுத்தியுள்ளது. மேலும் வைரஸ் பரவல் நெருக்கடியால் மக்கள்
தங்கள் தேவைகளை நிறைவேற்றவும் பராமரிக்கவும் பெரிதும் சிரமப்படுகிறார்கள்.
நாட்டின் தங்குமிடம் மற்றும் உணவு ஆகியவற்றின் சேவைதுறை
கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. இத்துடன் பாதுகாப்பு, சமூக உதவி, உற்பத்தி, சில்லறை விற்பனை மற்றும் கட்டுமானம் ஆகிய
தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க புள்ளிவிபரங்கள்
தெரிவிக்கின்றன.
0 comments:
Post a Comment