ஹிந்து பெண்ணின் இறுதி பயணம்;
தோள் கொடுத்த முஸ்லிம் இளைஞர்கள்
பாராட்டு குவிகிறது.
இந்தியாவில் மத்திய .பிரதேச மாநிலத்தில் இறந்த
ஹிந்து பெண்ணின்
இறுதி யாத்திரையில்,
ஊரடங்கு காரணமாக
உறவினர்களால் பங்கேற்க முடியவில்லை. இதையடுத்து, அவரது
உடலை மயானத்திற்கு
சுமந்து சென்ற
முஸ்லிம் இளைஞர்களுக்கு
பாராட்டு குவிகிறது.
65 வயது
பெண், உடல்நலக்குறைவால்,
6ம் திகதி
இறந்தார். அவரது
இரு மகன்களும்,
தாயின் இறுதி
சடங்குகளுக்காக வீடு வந்து சேர்ந்தனர். கொரோனா
வைரஸ் பரவி
வருவதால், பெரும்பாலான
உறவினர்களால் வரமுடியவில்லை. இந்நிலையில்,
தாயின் உடலை,
மயானத்திற்கு எப்படி எடுத்துச் செல்வது என,
மகன்கள் இருவரும்
தவித்தனர். அப்போது, அருகில் வசிக்கும் முஸ்லிம்
இளைஞர்கள், அவர்களுக்கு உதவ முன் வந்தனர்.
இறந்த
மூதாட்டியின் உடலை, 2.5 கி.மீ., துாரத்தில்
உள்ள மயானம்
வரை சுமந்து
சென்றனர். அங்கு
நடந்த இறுதி
சடங்குகள் அனைத்திலும்
இளைஞர்கள் உதவியாக
இருந்தனர். இது குறித்த, 'வீடியோ' காட்சிகள்
மற்றும் படங்கள்
சமூக வலைதளங்களில்
பரவி, அவர்களுக்கு
பாராட்டு குவிகிறது.
இதுகுறித்து,
காங்கிரஸ்., மூத்த
தலைவரும், முன்னாள்
முதல்வருமான கமல்நாத், 'டுவிட்டர்' சமூக வலைதளத்தில்
வெளியிட்டுள்ள பதிவில், 'ஹிந்து பெண்ணின் இறுதி
பயணத்திற்கு, அவரது மகன்களுடன், முஸ்லிம் இளைஞர்கள்
இணைந்து தோள்
கொடுத்துள்ளது, சமூகநல்லிணக்கத்திற்கு முன்மாதிரியாக
அமைந்துள்ளது' என, கூறியுள்ளார்.
இது
பற்றி, முஸ்லிம்
இளைஞர்கள் கூறும்போது,
'சிறுவயது முதல்
எங்களுக்கு தெரிந்தவரான அவருக்கு, செய்யும் கடமையாக,
நாங்கள் இதை
கருதுகிறோம்' என்று
கூறியுள்ளனர்.
0 comments:
Post a Comment