குலாப் ஜாமூன்



தேவையான பொருட்கள்
சர்க்கரை பாகு தயாரிக்க...
சர்க்கரை - 1 கப்
தண்ணீர் - 1 கப்
ஏலக்காய் - 3
எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன்

குலாப் ஜாமூன் தயாரிக்க...
பால் பவுடர் - 9 டேபிள் ஸ்பூன்
மைதா - 3 1/2 டேபிள் ஸ்பூன்
ரவை - 1 டேபிள் ஸ்பூன்
பேக்கிங் சோடா - 1 சிட்டிகை
எலுமிச்சை சாறு - 1 டீ ஸ்பூன்
நெய் / வெண்ணெய் - 1 டீ ஸ்பூன்
வெதுவெதுப்பான பால் - 5 டேபிள் ஸ்பூன்

செய்முறை

அகலமான பாத்திரத்தில், சர்க்கரையுடன் தண்ணீர் சேர்த்து, கொதிக்க வைக்கவும். ஒரு கொதி வந்ததும், மிதமான சூட்டில் அடுப்பை வைத்து, நான்கு நிமிடங்கள் சர்க்கரை பாகை காய்ச்சவும்; லேசாக, கையில் ஒட்டும் பதத்தில் வரும்.இதில், பொடித்த ஏலக்காய் பொடி, எலுமிச்சை சாறு பிழிந்து, தனியே எடுத்து வைக்கவும்.
அகலமான பாத்திரத்தில், பால் பவுடர், ரவை, மைதா சேர்த்து கலந்து கொள்ளவும். இதில், பேக்கிங் சோடா, நெய் அல்லது வெண்ணெய், எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து கொள்ளவும். அதன்பின், வெதுவெதுப்பான பாலை சிறிது சிறிதாக சேர்த்து, மென்மையான மாவாக பிசைந்து கொள்ளவும். கையில் நெய் தடவி, சிறு உருண்டைகளாக செய்யவும்; உருண்டைகளின் மேல், கீறல்கள் எதுவும் இல்லாமல் இருக்க வேண்டும்.
வாணலியில் போதுமான அளவு நெய் விட்டு, மிதமான சூட்டில், ஜாமூன் உருண்டைகளை, பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.உடனடியாக, சூடான சர்க்கரை பாகில் போடவும். பாகு ஆறியிருந்தால், அடுப்பை மிதமான சூட்டில் வைத்து, பாகை வைக்கவும். எல்லா உருண்டைகளையும் பொரித்து, பாகில் சேர்த்த பின், அடுப்பை அணைத்து விட்டு, இரண்டு மணி நேரம் அப்படியே மூடி வைத்து, அதன் பின் சாப்பிடவும்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top