அ.இ.ம.கா.உயர்பீடக் கூட்டம் 10 மணிக்கு!
ஜனாதிபதியுடனான சந்திப்பு நண்பகல் 12க்கு!!
ஏ.எச்.எம்.பூமுதீன்
ஜனாதிபதி
மஹிந்த ராஜபக்ஸவுக்கும்
- அகில இலங்கை
மக்கள் காங்கிரஸூக்குமிடையிலான
விஷேட சந்திப்பு
நாளை 6 ஆம் திகதி சனிக்கிழமை நன்பகல்
12 மணிக்கு அலரி மாளிகையில் இடம்பெறவுள்ளது.
ஜனாதிபதி;த் தேர்தல்
அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில்
இது முக்கியத்துவமான
சந்திப்பு என
தெரிவிக்கப்படுகின்றது.
முஸ்லிம்களின்
இருப்பு ,கௌரவம்
மற்றும் வடமாகாண
முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் ஜனாதிபதியுடனான இச்சந்திப்பின்போது
விரிவாக ஆராயப்படவுள்ளது.
ஜனாதிபதியுடனான
சந்திப்புக்கு முன்பதாக ,அகில இலங்கை மக்கள்
காங்கிரஸின் அவசர உயர்பீட கூட்டம் நாளை
காலை 10 மணிக்கு
அமைச்சர் ரிசாத்
பதியுதீன் தலைமையில்
இடம்பெறவுள்ளது.
உயர்பீடக்
கூட்டத்தின் போது ஜனாதிபதி தேர்தல் தொடர்பிலும்
ஜனாதிபதி தேர்தலில்
எந்த வேட்பாளரை
ஆதரிப்பது என்பது
குறித்தும் விரிவாக
ஆராயப்படவுள்ளதுடன் நண்பகல் இடம்பெறும்
ஜனாதிபதியுடனான சந்திப்பின் போது முஸ்லிம் சமுகம்
தொடர்பில் பேசப்படவேண்டிய
விடயங்கள் குறித்தும்
கலந்துரையாடப்படவுள்ளது.
ஜனாதிபதியுடன்
நாளை சந்திப்பை
மேற்கொள்கின்ற போதிலும் குறித்த சந்திப்பின் பின்னர்
கட்சியின் உயர்பீடக்
கூட்டம் மீண்டும்
கூடியே இறுதித்
தீர்மானத்தை அறிவிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
--
0 comments:
Post a Comment