9 வயது மகள் பிணத்தை 6 மாதங்களாக
பிரிட்ஜில்
பதுக்கி வைத்திருந்த தாய்!
அமெரிக்காவின்
ஹூஸ்டனைச் சேர்ந்த
9 வயது சிறுமியின்
இறந்த உடல்
அவரது வீட்டின்
ரெப்ரிஜிரிட்டேரில் இருந்து மீட்கப்பட்டது.
இதுதொடர்பாக அந்த சிறுமியின் தாயாரைப் பொலிஸார்
கைது செய்துள்ளனர்.
அந்தப் பெண்ணின்
பெயர் ஆம்பர்
கேயெஸ். இவர்
மீது தனது
மகளைப் படுகாயப்படுத்தி
கொலை செய்ததாக
புகார் பதிவு
செய்யப்பட்டுள்ளது.
ஆம்பரின்
9 வயது மகளான
ஆயஹ்னா கோம்ப்,
அவரது வீட்டின்
ஃபிரிட்ஜில் அடைத்து வைக்கப்பட்டதைப் பொலிஸார் கண்டுபிடித்து
உடலை மீட்டனர்.
சிறுமி கோம்ப்,
செரிபரல் பால்சி
என்ற மன
வளர்ச்சி இல்லாத
குழந்தை ஆவார்.
விசாரணையின்போது
ஆம்பர் கூறுகையில்,
கடந்த ஜனவரி
29ம் தேதி
எனது மகள்
எழுந்திருக்கவில்லை. பலமுறை எழுப்பிப்
பார்த்தும் அவள் எழுந்திருக்கவில்லை. இதையடுத்து ஒரு
துணியில் சுற்றி
பிரிட்ஜுக்குள் வைத்து விட்டேன் என்று கூறியுள்ளார்.
மனவளர்ச்சி
இல்லாத குழந்தையின்
பெயரை பயன்படுத்தி
அதற்குரிய சமூக
பலன்களை ஆம்பர் அனுபவித்து
வந்து உள்ளார்.
குழந்தையை அவர்
இறப்பதற்கு 2 வருடஙக்ளுக்கு முன்பு இருந்து
மருத்துவரிடம் பரிசோதனைக்கு கொண்டு
செல்லவில்லை.குழந்தைக்கு சரியாக சாப்பாடு கூட
தராமல் இருந்துள்ளார்
.மேலும் குழந்தையை
வைத்திருந்த ரெப்ரிஜ்ரேட்டரை தொடர்ந்து எந்தவித சலனமும்
இல்லாம் பயன்படுத்தி
வந்து உள்ளார்
என உள்ளூர்
பத்திரிகை செய்தி
வெளியிட்டு உள்ளது.
0 comments:
Post a Comment