20வது திருத்தச் சட்டத்திற்கு எதிராக
உயர்நீதிமன்றம் செல்வோம்
- ஹக்கீம் எச்சரிக்கை
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் எதிர்ப்பையும்மீறி தற்போது முன்வைக்கப்பட்டுள்ள யோசனைக்கு அமைய 20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை கொண்டு வந்தால், அதற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய போவதாக அதன் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
மாத்தளை நகர சபை மண்டபத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
20வது திருத்தச் சட்டத்திற்கு எதிராக வாக்களிப்போம். காரணம் இதனை மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தில் நிறைவேற்ற வேண்டும். மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை தடுக்க எமக்கிருக்கும் அதிக கூடிய பலத்தை நாங்கள் பயன்படுத்தி அதற்கு எதிராக செயற்படுவோம்.
எமது எதிர்ப்பையும் மீறி சட்டமூலமாக அதனை வர்த்தமானியில் வெளியிட்டால், அதற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கொன்றை தாக்கல் செய்யவும் நாங்கள் எதிர்பார்த்துள்ளோம்.
ஜனாதிபதி அப்படியான ஒன்றை செய்ய மாட்டார். எமது எதிர்பார்ப்புகளுக்கு அவர் செவி கொடுப்பார் என நம்புகிறோம்.
நாங்கள் தெரிவு செய்த ஜனாதிபதி எமது கருத்துக்களை கவனத்தில் கொள்ளாது முடிவுகளுக்கு வருது நியாயமானதல்ல. அத்துடன் அவரும் இது குறித்து கவனம் செலுத்துவார் என எதிர்ப்பார்க்கின்றோம் என அமைச்சர் ரவூப் ஹக்கீம் குறிப்பிட்டுள்ளார்.
0 comments:
Post a Comment