சாய்ந்தமருது நகர சபைக் கோரிக்கையை வலியுறுத்தி
15ஆம் திகதி திங்கட்கிழமை முழுநாள் ஹர்த்தாலுக்கு அழைப்பு!

சாய்ந்தமருது நகர சபைக் கோரிக்கையை வலியுறுத்தி, நாளை மறுதினம் 15ஆம் திகதி திங்கட்கிழமை சாய்ந்தமருது பிரதேசத்தில் முழுநாள் ஹர்த்தால், கடையடைப்பை மேற்கொள்வதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
சாய்ந்தமருது ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல், வர்த்தக சங்கம்,  நிறுவனங்கள் மற்றும் பொது அமைப்புகளின் ஒத்துழைப்புடன் இதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சாய்ந்தமருது பொது மக்கள் அமைப்பு துண்டுப் பிரசுரத்தின் மூலம் அறிவித்துள்ளது.
திங்கட்கிழமையன்று – அனைத்து வர்த்தக நிலையங்கள், கடைகள், அரச, தனியார் நிறுவனங்கள் மற்றும் பாடசாலைகள் அனைத்தையும் திறக்காதிருப்பதுடன், பொது மக்கள் அனைவரும் அன்றைய தினம் காலை 7.30 மணிக்கு சாய்ந்தமருது ஜும் ஆப் பெரிய பள்ளிவாசலுக்கு வருகை தந்து இரண்டு ரக்அத் சுன்னத் தொழுகை தொழுதவுடன் விஷேட  (துஆ) பிரார்த்தனையுடன் சாய்ந்தமருது உள்ளூராட்சி சபையை விரைவில் வென்றெடுக்க அஹிம்சைப் போராட்டத்தில் ஈடுபடுமாறு மேற்படி அமைப்பினால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top