கொழும்பில் தேசிய சர்வசமய இளைஞர் அணி உதயம்!
(காரைதீவு நிருபர்)
உலகின்
பல நாடுகளிலும்
இயங்கிவரும் சமாதானத்திற்கான சமயங்களின்
பேரவையின் இலங்கைக்கிளையின்
இளைஞர் அணி
முதற்றடவையாக தோற்றுவிக்கப்பட்டுள்ளது.
சமாதானத்திற்கான
சமயங்களின் இலங்கைப் பேரவையின் இருநாள் வதிவிடச்செயலமர்வு
கொழும்பில் நடைபெற்றபோதே மேற்படி இணைஞர் அணி
தோற்றுவிக்கப்பட்டது.
சமாதானத்திற்கான
சமயங்களின் இலங்கைப் பேரவையின் தலைவரும் ஸ்ரீ
ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் வேந்தருமான
அதிவண. பேராசிரியர்
வெல்லன்வில விமலரத்தின நாயக்கதேரர் தலைமையில் இடம்பெற்ற
இருநாள் செயலமர்வில்
அதிதியாக கொழும்பு
பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் கலாநிதி குமார
ஹிரிம்புரேகம கலந்துகொண்டார்.
இலங்கைப்
பொலிஸ் திணைக்களத்தின் சிறுவர்
மற்றும் பெண்கள்
பிரிவின் பணிப்பாளரும்
சிரேஸ்ட பொலிஸ்
அத்தியட்சகருமான ஜெயசூரியவும் கலந்துசிறப்பித்தார்.
கொழும்பு
பத்தரமுல்லையில் அமைந்துள்ள இக்டாட் பயிற்சி நிலையத்தில்
கடந்த சனி
ஞாயிறு தினங்களில்
நடைபெற்ற இருநாள்
வதிவிடச்செயலமர்வின் இறுதியாக இவ்வணி
தெரிவுசெய்யப்பட்டது.
இலங்கையின்
நாலா பாகங்களிலுமிருந்து
இளைஞர் யுவதிகள்
வரவழைக்கப்பட்டு அதற்கான பயிற்சியும் வழங்கப்பட்டது. துருக்கி
மற்றும் இந்தோனேசிய
நாடுகளிலிருந்தும் இளைஞர்கள் கலந்துகொண்டமை
குறிப்பிடத்தக்கது.
பேரவையின்
பொதுச்செயலாளரும் கொழும்பு பல்கலைக்கழகத்தின்
பேராசிரியருமாக வண.மெதவாச்சியே தம்மஜோதி தேரர்
பேரவையின் பொருளாளர்
திருமதி சிவநந்தினி
துரைசாமி உபதலைவர்
மௌலவி எஸ்.எச்.ஆதம்பாவா
மதனி உப
பொருளாளர் திருமதி
கிறிஸ்ரோபல் சவரிமுத்து பேரவையின் அம்பாறை மாவட்ட
தலைவர் டாக்டர்
எம்.ஜ.எம்.ஜமீல்
பொதுச்செயலாளர் தேசமான்ய வி.ரி.சகாதேவராஜா
உயர்பீடஉறுப்பினர் அஷ்சேய்க் எவ்.எம்.அன்சார்
மௌலானா ஆகியோர்
செயலமர்வின் நெறிப்படுத்துனர்களாவும் வளவாளர்களாகவும்;
செயற்பட்டனர்.
ஓய்வுநிலைப்பணிப்பாளர்களான
ஜி.ஞானப்பிரகாசம்
திருமதி இராணி
பெர்ணாண்டோ திட்டப்பணிப்பாளர் வசந்தஜெயசிங்க
இணைப்பாளர் பி.டி.பத்மசிறி ஆகியோர்
வழிப்படுத்துனர்களாகச் செயற்பட்டனர்.
புதிய
இளைஞர் அணியின்
தலைவராக வவுனியா
பௌத்தசமய இளைஞனும்
பொதுச்செயலாளராக கல்முனை கிறிஸ்தவ சமய யுவதியும்
பொருளாளராக காரைதீவு இந்து இளைஞனும் ஏகமனதாக
தெரிவுசெய்யப்பட்டனர். ஏனைய பதவிகளில்
நான்கு இனங்களையும்
சேர்ந்த மூவின
இளைஞர் யுவதிகள்
தெரிவுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment