பாடசாலை மாணவர்களை போதைப்பொருட்களிலிருந்து
பாதுகாப்பதற்கு விரிவான தேசிய வேலைத்திட்டம்

- காலி றிச்மன்ட் கல்லூரியின் பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி

பாடசாலை மாணவர்களை போதைப்பொருட்களில் இருந்து பாதுகாத்துக்கொள்வதற்கு விரிவான தேசிய வேலைத்திட்டமொன்றை எதிர்வரும் நாட்களில் நடைமுறைப்படுத்தப்போவதாக ஜனாதிபதி கூறினார்.
போதைப்பொருள் தொடர்பான சட்ட திட்டங்களை எதிர்காலத்தில் மிகக் கடுமையாக நடைமுறைப்படுத்தப்போவதாக தெரிவித்த ஜனாதிபதி நல்லதொரு சமூதாயத்தைக் கட்டியெழுப்புவதற்கு சவாலாக இருக்கின்ற போதைப்பொருட்களை சமூகத்தில் இருந்து ஒழிப்பதற்காக எடுக்கக்கூடிய அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதாகக் கூறினார்.
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன காலி றிச்மன்ட் வித்தியாலயத்தில் 138வது வருடாந்த பரிசளிப்பு விழாவில் கலந்துகொண்டபோது மேற்கண்டவாறு தெரிவித்தார்.
சமூகத்தைப் பற்றிக்கொண்டிருக்கின்ற போதைப்பொருள் காரணமாக அநாகரீகம், ஒழுக்கமின்மை என்பவை நாடு முழுவதிலும் பரவியுள்ளதென்பதை சுட்டிக்காட்டிய னாதிபதி இந்த துன்பத்திலிருந்து நாட்டையும் மக்களையும் பாதுகாத்துக்கொள்வதில் மேலும் காலம் தாழ்த்த முடியாதென்பதையும் தெரிவித்தார்.
அத்துடன் இணையத்தளத்திலும் தொலைக்காட்சியிலும் பார்க்கின்ற ஒரு சில காட்சிகள் சிறுவர் மனங்களை திரிபுபடுத்துவதாகவும் அது தொடர்பில் கவனம் செலுத்தி ஏதேனும் ஒழுங்கு முறையான வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு பொறுப்புள்ள அனைவரும் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் னாதிபதி தெரிவித்தார்.
நாட்டில் ஏற்படுத்தப்படுகின்ற புதிய பொருளாதார மற்றும் அரசியல் மாற்றங்களுடன் நல்ல சமூகம் ஒன்றை கட்டியெழுப்புவது தொடர்பாக புதிய திட்டங்கள் மற்றும் முன்மாதிரிகள் ஊடாக செயலாற்ற வேண்டியதன் முக்கியத்துவத்தையும் சுட்டிக் காட்டினார்.
காலி றிச்மன்ட் வித்தியாலயத்திற்கு வருகை தந்த ஜனாதிபதியை மாணவர்கள் கோலாகலமாக வரவேற்று பாடசாலைக்கு அழைத்துச் சென்றனர். வித்தியாலயத்தின் சாரணர்கள் னாதிபதிக்காக விசேட அணிவகுப்பு மரியாதையை செலுத்தினர்.
யுத்தத்தில் உயிரிழந்த வித்தியாலயத்தின் பழைய மாணவ இராணுவ வீரர்களை நினைவுகூர்வதற்காக வித்தியாலய வளாகத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள படை வீரர் நினைவுத் தூபிக்கு மலர் அஞ்சலி செலுத்தும் நிகழ்வில் னாதிபதி கலந்துகொண்டார்.
அதன் பின்னர் பரிசளிப்பு விழாவில் கலந்துகொண்டு மிகத் திறமை காட்டிய மாணவர்களுக்கு அடையாளமாக பரிசளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டார்.
ஜனாதிபதிக்கு றிச்மன்ட் கல்லூரியின் பழைய மாணவர் சங்கம் பாராட்டுத் தெரிவித்து நினைவு பரிசு ஒன்றையும் வழங்கியது.

அமைச்சர் பியசேன கமகே, தென் மாகாண ஆளுநர் ஹேமக்குமார நாணயக்கார, கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்டின் பெர்னாந்து, பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி, தென் மாகாண முதலமைச்சர் ஷான் விஜயலால் சில்வா, பாராளுமன்ற உறுப்பினர் ரமேஷ் பத்திரன ஆகியோருடன் கல்லூரி அதிபர் .எம்.என்.ஏக்கநாயக்க உள்ளிட்ட ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள் ஆகியோருடன் பலர் இப்பரிசளிப்பு விழாவில் கலந்துகொண்டனர்.









0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top