சாய்ந்தமருது நகரசபை கோரிக்கையும்,
இக்கோரிக்கை வலுப்பெறுதலுக்கான காரணங்களும்
(மருதூர் அபூஅப்துல்லாஹ்)
190 வருட கால வரலாற்றை கொண்ட
சாய்ந்தமருதூர்,1928ம் ஆண்டு
தொடக்கம் 10 வட்டாரங்களாக பிரிக்கப்பட்டு, கரைவாகு தெற்கு கிராம சபையாக இயங்கி வந்தது.
1987ம் ஆண்டில் கரைவாகு
தெற்கு
கிராம
சபை,
கல்முனை பிரதேச
சபையுடன் இணைக்கப்பட்டது.அன்றிலிருந்து தொடர்ச்சியாக
சாய்ந்தமருது மக்கள் புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர்.
அபிவிருத்தி
திட்டங்களில் புறக்கணிப்பு, வேலை வாய்ப்புகளில்
புறக்கணிப்பு, குபைகளை அகற்றுவதில் புறக்கணிப்பு, தெரு லாம்புகள் போடுவதில் ஏனோதானோ என்ற நிலை.
தேர்தல்
காலங்களில் சாய்ந்தமருது மக்களின் வாக்குகளை சூரையாடி
விட்டு,தேர்தல்
முடிந்த கையோடு, சாய்ந்தமருது
மக்களை முற்றிலும்
மறந்து விடுவார்கள்.
இறுதியாக
நடைபெற்ற உள்ளூராட்சி
மன்றத் தேர்தலில்,அதிகூடிய விருப்பு
வாக்குகளை பெறுபவரே
கல்முனை மாநகர சபையின் மேயரென மக்களுக்கு வாக்குறுதி வழங்கி விட்டு,பதவியை
இரண்டு வருடங்களில்
பறித்தெடுத்து சாய்ந்தமருது மக்களை மடையர்களாக்கியதுதான் ஏற்கனவே இருந்த சாய்ந்தமருது நகர சபை கோரிக்கை
வலுப்பெற காரணமாயிற்று.
சாய்ந்தமருதில்
நிர்மாணிக்கப்பட்டு வந்த சகல
வசதிகளுடனான கடற்கரைப் பூங்காவை முழுமையடையாது இடையில் தடுத்ததும் காரணமே.
கல்முனை
மாநகரில் அதிகூடிய
சனத்தொகையை (29825) வாக்காளர்கள் 18720 கொண்ட
சாய்ந்தமருதுக்கு இவ்வாறான அநீதிகள் இடம்பெறும் போது,எந்தக் குடிமகனுக்குத்தான்
ரோஷம் வராது???
(கரைவாகு தெற்கு கிராம சபை)
ஆண்ட பரம்பரை (ஊர்மக்கள்)
மீண்டும் ஆள நினைப்பதில் என்ன குறை
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.