ஐ.சி.சி டெஸ்ட் தரவரிசை
குமார் சங்கக்காரவை பின்னுக்கு தள்ளியுள்ள ஸ்டீவன் சுமித்
சர்வதேச கிரிக்கெட் சம்மேளனத்தின் புதிய தர வரிசைப்படி டெஸ்ட் போட்டிகளில் துடுப்பாட்ட வீரர்களை தரவரிசைப்படுத்தும்
பட்டியலில் அவுஸ்திரேலிய வீரர் ஸ்டீவன் ஸ்மித் முதலிடத்தை பிடித்துள்ளார்.
2012 ஆம் ஆண்டு மைக்கல் கிளார்க்கிற்கு பின்னர்,
தரவரிசைப் பட்டியலில்
முதல் தடவையாக முதலிடம் பெறும் அவுஸ்திரேலிய துடுப்பாட்ட வீரர் என்ற பெருமை
ஸ்டீவன் ஸ்மித்துக்கு கிடைத்திருக்கிறது.
இதற்கமைய, இதுவரை முதலாவது இடத்தில் இருந்த இலங்கை வீர்ரான குமார் சங்கக்கார இரண்டாவது
இடத்திற்கு பின் தள்ளப்பட்டுள்ளார். அவுஸ்திரேலிய
அணியின் கரீபியன் சுற்றுத் தொடர் ஆரம்பமாவதற்கு முன்னர் ஸ்டீவன் ஸ்மித் நான்காவது
இடத்தில் இருந்தார். தற்போது இவர் குமார் சங்கக்கார, ஏ.பி டி விலியஸ், ஹஸீம் அம்லா ஆகியோரை தாண்டி உச்சத்தை தொட்டு
முதலாம் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
கிங்ஸ்டனில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் சிறந்த
விளையாட்டு வீரராக தெரிவு செய்யப்பட்ட
ஸ்மித் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில் 199 ஓட்டங்களை குவித்தமையும்
குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment