சுயநல அரசியல் காய் நகர்த்தல்கள்
சாய்ந்தமருதின் அபிவிருத்திக்கு குந்தகம்?
புதிய
அரசாங்கத்தின் 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ்
ருபா 30 மில்லியன் செலவில் ஆரம்பிக்கப்பபட்டுள்ள சாய்ந்தமருது தோணா
அபிவிருத்தி வேலைகளின் ஆரம்ப நிகழ்வுகளை குழப்ப
எடுத்த முயற்சிகள் அதன்பின்னர்; தோணா வேலைத்திட்ட பெயர்
பலகையை அசிங்கப்படுத்தியமை
தற்போது தோணாவின் பெரும்பகுதி சுத்தமாக்கப்பட்டுள்ள நிலையில் தோணாவோரம் மீண்டும் குப்பைகள் கொட்டப்படுவது போன்ற செயல்கள் சாய்ந்தமருதின்
அபிவிருத்திக்கு குந்தகம் விளைவிப்பதற்கான சுயநல அரசியல் காய்
நகர்த்தல்களா? என்று கேட்கத் தோன்றுகின்றது.
அரசின்
100 நாள் வேலைத்திட்;டத்தின் கீழ் சாய்ந்தமருதில்
நடைபெற வேண்டிய வேலைகளைத் திட்டமிடவும்
கண்காணிக்கவும் தெரிவுசெய்யப்பட்ட குழுவும் தற்போது செயலற்றதாக ஆக்கப்பட்டுள்ளது.
தோணா அபிவிருத்தி வேலைகளின் அங்குரார்ப்பண நிகழ்வு தொடர்;பான
சகல முயற்சிகளையும் இக்குழுவே மேற்கொண்டதோடு தோணாவின் அயலில் வாழும் மக்களுக்கு
தோணா அபிலிருத்தி தொடர்பாகவும் சுற்றாடலைப். பேணுவது தொடர்பாகவும் அறிவுட்டல்கள்
செய்வதற்கும் அபிவிருத்தி வேலைகளின் தரத்தைக் கண்காணிக்கவும் திட்டமிட்டிருந்த வேளையிலேயே இக்குழுவின் செயற்பாடுகள் முடக்கப்பட்டுள்ளது. இதற்கு யார் காரணம்?
தோணா
அபிவிருத்தியின் முதற் கட்டமாக தோணாவை
அகழ்வு செய்து துப்பரவாக்கும் வேலைகள்
தற்போது நடைபெற்று வருகின்றது. அதன் பின்னர் பாதுகாப்புச்
சுவர்கள் தோணாவின் இருமருங்கிலும் கட்டப்படவுள்ளன. அத்துடன் கடல் நீரை தோணாவுக்குள்
செலுத்துவதற்கும் தோணாவிலிருந்து நீரை கடலுக்குள் செலுத்துவதற்குமாக
மூடித் திறக்கக் கூடிய பெரிய அளவிலான
குழாய்கள் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்து.
இதன்
பின்னர் முகத்துவாரத்திற்கும் வைத்தியசாலை வீதிக்கும் இடைப்பட்ட தோணாவின் பகுதி படகுகள் தரிப்பு
நிலையமாகவும் பாரிய வர்த்தக வலயமாகவும்
பொழுது போக்கிடமாகவும் மாற்றப்படும்.
வைத்தியசாலை
வீதியிலிருந்து மாளிகைக்காடுவரை தோணாவின் இருமருங்கிலும் நடைபாதைகள அமைக்கப்பட்டு பூ
மரங்கள், ஆசனங்கள்,குடிநீர் வசதிகள், குப்பை போடும் வசதிகள்
என்பனவற்றோடு ஒரு நீண்ட பூங்கா அமைக்கப்படும்.
(இவற்றின்
மாதிரியை இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படங்களில் காணலாம்)
எனவே
எதிர்காலத்தில் சுய நல செயற்பாடுகளுக்கு
இடம் கொடாமல் இத்தோணா அபிவிருத்திக்கு
முழுமையான ஒத்துழைப்பை வழங்கி சுத்தமான சுற்றாடல்
கொண்டதும் மக்களின் பொருளாதார மேம்பாட்டிற்கு உதவக்கூடிய வளங்களைக் கொண்டதுமான பிரதேசமாக இத் தோணாவை அண்மித்த
பகுதியை மாற்ற முயல்வோம்.
டாக்டர். எம்.ஐ.எம். ஜெமீல்
தலைவர்,
சிரேஸ்ட பிரஜைகள் ஒன்றியம்,
சாய்ந்தமருது.
0 comments:
Post a Comment