அனைத்து மக்களுடனும் இணைந்து செயலாற்றுதல்
இனங்களுக்கிடையே நல்லிணக்கத்துக்கு அத்திபாரமாகும்

-    ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன

அனைத்து மொழிகளையூம் பேசுகின்ற அனைத்து மக்களுடனும் சேர்ந்து செயலாற்றுதல் இனங்களுக்கிடையே நல்லிணக்கத்திற்கு அத்திவாரமாகும் என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.
வளங்களை அபிவிருத்தி செய்வதன்மூலம் மாத்திரம் நாட்டின் அபிவிருத்தி இலக்குகளை  அடைய முடியாதென்பதையூம் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
பண்பும் ஒழுக்கமும் நிறைந்த பிரசைகள் நாட்டின் அபிவிருத்திக்கு அத்தியாவசிய காரணியாகும்.
நேற்று (12) முற்பகல் கொள்ளுப்பிட்டி புனித அந்தோனியார்  மகளிர் பாடசாலையின் 75வது ஆண்டு நிறைவூ கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இற்றைக்கு 75 ஆண்டுகளுக்கு முன்னர் புனித அந்தோனியார் மகளிர் பாடசாலை ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் கொழும்பு நகரம், ஒரு நாடு என்ற வகையில் இலங்கையிலும் உலகத்திலும் இருந்த நிலையிலிருந்து இன்று தொழில்நுட்பத்திலும் விஞ்ஞானத்திலும் புரட்சிகரமான மாற்றத்தை அடைந்துள்ளது.
ஆனால், அதற்கு இணையான வேகத்தில் மனிதர்களின் ஒழுக்கமும் பண்பும் அபிவிருத்தி அடைந்துள்ளதா என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டுமெனவூம் ஜனாதிபதி கூறினார்.
இவ்விழாவில் கலந்துகொண்ட ஜனாதிபதி அவர்களை, மாணவிகளும் பாடசாலை சமூகத்தினரும் கோலாகலமாக வரவேற்றனர். அத்துடன் பாடசாலையின் 75 ஆண்டு நிறைவை கொண்டாடுகின்ற மகிழ்ச்சியை ஜனாதிபதி அவர்களுடன் பகிர்ந்துகொண்டார்.


இந்நிகழ்வில் பொது அமைதி, கிறிஸ்தவ அலுவல்கள் அமைச்சர் சட்டத்தரணி ஜோன் அமரதுங்க, நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க ஆகியோருடன் பாடசாலை அதிபர் உட்பட ஆசிரியர்கள், மாணவிகள், பழைய மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.






0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top