சவூதி அரேபிய தூதுவர் அப்துல் அசீஸ் அல் ஜம்மாஸ்
ஜனாதிபதியுடன் சந்திப்பு
தனது
சேவைக் காலத்தை
முடித்துக்கொண்டு விடைப் பெற்றுச் செல்லும் சவூதி அரேபிய
தூதுவர் அப்துல்
அசீஸ் அல்
ஜம்மாஸ் நேற்று (17) ஜனாதிபதி
செயலகத்தில் வைத்து ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன
அவர்களை சந்தித்தார்.
தூதுவர்
அசீஸ் அல்
ஜம்மாஸ் அவர்களது
சேவைக் காலப்பகுதியில்
இரு நாடுகளுக்கிடையேயும்
பரஸ்பர புரிந்துணர்வையும்
பொருளாதார கூட்டுறவையும்
அபிவிருத்தி செய்வதற்காக அவர் மேற்கொண்ட குறிப்பிடத்தக்க
பங்களிப்புகளை ஜனாதிபதி பாராட்டினார்.
சவூதி அரேபிய
அரசாங்கம் அபிவிருத்தி
நிகழ்ச்சித் திட்டங்களுக்காக இலங்கைக்கு
பல ஆண்டுகளாக
வழங்கிவரும் உதவிகளை நினைவுகூர்ந்த ஜனாதிபதி, சவூதி அரேபிய
அரச குடும்பத்தைச்
சேர்ந்த ஒரு
சிரேஷ்ட உறுப்பினர்
பொலனறுவை பிரதேசத்திற்கு
விஜயம் செய்து
அங்கு ஒரு
நீர்ப்பாசன கருத்திட்டத்திற்கு உதவிகளைப்
பெற்றுக் கொடுத்தமையையும்
ஜனாதிபதி விசேடமாக
குறிப்பிட்டார்.
தமது
அரசாங்கம் இலங்கைக்கு
தொடர்ந்தும் முழுமையான ஒத்துழைப்புகளை வழங்கும் என
தூதுவர் அசீஸ்
அல் ஜம்மாஸ்
உறுதியளித்தார். அரசாங்கத்தின் நிகழ்ச்சித் திட்டங்களை பாராட்டிய
அவர், சர்வதேச
மன்றங்களில் இலங்கைக்கு உதவி வழங்கப்படும் என்றும்
தெரிவித்தார்.
சவூதி அரேபியாவுக்கு
விஜயம் செய்யும்படி
சவூதி அரசாங்கத்தின் சார்பில்
ஜனாதிபதி மைத்ரிபால
சிறிசேனவுக்கு சவூதி அரேபிய
தூதுவர் அழைப்பும் விடுத்தார்.
0 comments:
Post a Comment