மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெற்றோரை இழந்த பிள்ளைகள்

900 பேர்களிடையே 342 இலட்சம் ரூபா பணம்
ஜனாதிபதியால் பகிர்ந்தளிப்பு

எதிர்வரும் 5 ஆண்டுகளில் இந்நாட்டின் தனிநபர்  வருமானத்தை 6 ஆயிரம் அமெரிக்க டொலர் வரை உயர்த்துவதற்கு அரசு எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி தெரிவித்தார்.
அதற்குரிய முதலீடுகள் கைத்தொழில்கள் உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் விரிவான அபிவிருத்தி மேற்கொள்ளப்படும் எனவும் ஜனாதிபதி கூறினார்.
சீதாவகை  ஆற்றில் இரத்தினக் கற்கள் அகழும் ஒருங்கிணைந்த முன்னோடிக் கருத்திட்டத்தின் பயன்களை அப்பிரதேச மக்களிடம் ஒப்படைக்கும் வைபவம்  இன்று 29 ஆம் திகதி முற்பகல் தெஹியோவிட்ட பிரதேச சபை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றபோது கௌரவ ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
புனித பூமி 165, சமுர்த்தி பயனாளிகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெற்றோரை இழந்த பிள்ளைகள் 900 பேர்களிடையே 342 இலட்ச ரூபா பணம் இவ்வாறு பகிர்ந்தளிக்கப்பட்டது.
இந்த வைபவத்தில் தொடர்ந்து உரையாற்றிய ஜனாதிபதி அவர்கள் இரத்தினக்கல் கைத்தொழில் இருந்து வியாபாரிகளும் அரசம் பெறுகின்ற இலாபத்தில் ஒரு பகுதியை அவ்வளங்களை பெற்றுக் கொடுக்கின்ற பிரதேசங்களில் உள்ள குறைந்த வருமானம் பெறுகின்ற குடும்பங்களிடையே பகிர்ந்தளிப்பதை கொள்கை ரீதியான விடயமாக எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் தெரிவித்தார்.
இதற்கான மிகத்தகுதியானவர்களை தெரிவு செய்யூம் பொறுப்பு பிரதேச செயலாளர் கிராம உத்தியோகத்தர், சமுர்த்தி உத்தியோகத்தர்  உள்ளிட்ட பிரதான வெளிக்கள உத்தியோகத்தர்களிடம் ஒப்படைக்கப்படுகின்றது. இதில் ஏதேனும் முறைகேடுகள் நிகழுமானால் அதுதொடர்பில் குறித்த அதிகாரிகள் பொறுப்புக்கூறவேண்டும் அது தொடர்பாக சூழல் அமைச்சுக்கு கிடைக்கும் அனைத்து முறைப்பாடுகள் தொடர்பாக விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் என்ற வகையில்  ஆராய்ந்து பார்ப்பதற்கு தான் நடவடிக்கை எடுப்பதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
இரத்தினக்கல் கைத்தொழிலில் ஈடுபட்டுள்ள வியாபாரிகள் சட்டபூர்வமாக சுதந்திரமாக தமது நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான வாய்ப்பை ஆகக்கூடிய அளவில் உறுதிப்படுத்துவதாகவும் இதன்போது தெரிவித்த ஜனாதிபதி அரசாங்கத்தினால் வழங்கப்பட வேண்டிய அனைத்து வசதிகளையும் பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார்.
கடந்த சில ஆண்டுகளாக இரத்தினக்கல் கூட்டுத்தாபனத்தின் நடவடிக்கைகள் தொடர்பாக எந்தவிதத்திலும் திருப்திப்பட முடியாது. இரத்தினக்கல் கைத்தொழிலை மேற்கொள்ள வேண்டியவர்கள் அக்கைத்தொழில் ஈடுபட்டிருக்கின்றவர்களேயொழிய அரசியல்வாதிகள் அல்ல எனத் தெரிவித்த ஜனாதிபதி அரசியல் தலையீடுகள் இன்றி தூய்மையான நிறுவனமாக இரத்தினக்கல் கூட்டுத்தாபனத்தின் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு உரிய நடவடிக்கைகளை எடுப்பதாகவும் தெரிவித்தார்.

சப்ரகமுவ மாகாண முதலமைச்சர் மஹிபால ஹேரத், ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய, அத்தாவூத செனவிரத்ன, சப்ரகமுக மாகாண சபையின் எதிர்கட்சித் தலைவி டாக்டர் துஷித்தா விஜயமான, இரத்தினக்கற்கள் மற்றும் ஆபரண அதிகாரசபையின் தலைவர் அனுர குணவர்தன ஆகியோர் உட்பட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.









0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top