பள்ளிவாசல் பிரதிநிதிகளைச் சந்திப்பதற்கு மறுத்தது ஏன்?
உத்தரவாதம் வழங்கியபடி கல்முனை மாநகரசபையின்
கடிதத்தை
பெறுவதற்கு நடவடிக்கை எடுக்காத்து ஏன்?
-
சாய்ந்தமருது மக்கள் முஸ்லிம் காங்கிரஸ் தலைவரிடம் கேள்வி
"உண்மையைப் பேசுவோம் அரசியலுக்கு அல்லாமல் நீதி நியாயத்துடன் செயல்பட்டு மரணித்து
இறுதி இடமான எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் சென்றடைவோம்.
===========================================================================
சாய்ந்தமருது
உள்ளூராட்சி மன்றம்
பள்ளிவாசல் வெளியிட்டுள்ள இரண்டாவது துண்டுப் பிரசுரத்திலிருந்து
===========================================================================
ஊர் மக்கள் மிகவும் மனச் சோர்வுடனும், வேதனையுடனும் காணப்படுகின்றார்கள். ஆகவே
இப்போதெல்லாம் மக்களின் கேள்வி கௌரவ அமைச்சர் றவுப் ஹக்கீம் அவர்கள் வேண்டுமென்று
காலத்தையும், நேரத்தையும்,
மக்களின்
எதிர்பார்ப்புகளையும் மழுங்கடித்துக் கொண்டிருக்கிறார் என்ற மறைமுகமான
சந்தேகத்துடன் காணப் படுகின்றார்கள். இந்த விடயத்தையும் கௌரவ அமைச்சர் றவுப்
ஹக்கீம் அவர்களிடம் தெளிவுபடுத்தினோம்.
அத்துடன் வருகின்ற பொதுத்தேர்தலுக்கு முன்னர் இந்த
விடயங்கள் அவசரமாகவும், அவசியமாகவும் பெற்றுத்தரவேண்டுமென்றும் வலியுறுத்தினோம். அத்துடன் இவ்வாறான
சிக்கலான வழிமுறைகளை கைவிட்டுவிட்டு, மிகவும் குறுகிய வழிமுறைகளைக் கையாண்டு மிகமிக விரைவாக இந்த
விடயத்தினை முன்னெடுத்துச் சென்று உள்ளூராட்சி சபையை பெற்றுத்தர வேண்டும் என்ற
கருத்துக்களும் முன்வைக்கப்பட்டது.
இதனை நன்கு செவிமடுத்த கௌரவ அமைச்சர் றவுப் ஹக்கீம்
அவர்கள். தாங்கள் அனைவரினதும் கருத்துக்களை பார்க்கின்றபோது இச்சபையை
பெற்றுக்கொள்வதற்கு நான் தான் தடையாக உள்ளேன் என்பது போன்று உங்கள் கருத்துக்கள்
இருக்கின்றது என்று கூறி தொடர்ந்து உரையாற்றுகையில் கட்சி தீர்மானித்து விட்டது
என்றும் அதேபோன்று தலைமைத்துவமும் தீர்மாநித்துவிட்டுத்தான் இதில் ஈடுபடுகின்றேன்
பின்னர் ஏன் இதில் சந்தேகம்? நான் உத்தரவாதம் தருகின்றேன் பலதடவை உரக்கக் கூறினார்கள் அத்துடன் செய்ய
முடியாத வேலைக்குப் பின்னால் தான் போவதில்லை என்றும் கூறினார்கள்.
மேலும் கூறுகையில் இந்த விடயத்தில் எதுவித சந்தேகமும்
கொள்ளத்தேவையில்லை. கல்முனை மாநகரசபையின் கடிதத்தை பெறுவதற்கு அதிகாரத்திலுள்ள
எமது உறுப்பினர்களை அழைத்துப் பேசி அதனை தான் செய்து தருவதாகப் பொறுப்பேற்றார்.
அதன்பின்னர் கல்முனை மாநகரசபையின் மு.கா.
உறுப்பினர்களோடு பேசி மாநகரசபையின் சம்மதக் கடிதத்தைப் பெறுகின்ற வேலை அமைச்சர்
அவர்களால் நடந்தேறவில்லை என்பதை உணர்ந்த பள்ளிவாசல் நிருவாகம் 2015.05.15ம் திகதி வெள்ளிக்கிழமை தோனா அபிவிருத்தி
வேலைத்திட்டம் அங்குரார்ப்பன நிகழ்வின்போது பள்ளிவாசல் நிருவாகம் அமைச்சரை அணுகி
சந்தித்துப் பேசுவதற்கு நேர ஒதுக்கீடு ஒன்று கோரியபோது கௌரவ அமைச்சர் ஹக்கீம்
அவர்கள் மறுத்துவிட்டார்கள். அதே தினம் இரவு 08.00 மணிக்கு அட்டாளைச்சேனையில் நடைபெற்றுக்கொண்டிருந்த
ஒரு நிகழ்வில் கலந்து கொண்ட அமைச்சர் அவர்களைச் சந்தித்து நேர ஒதுக்கீட்டைப்பெற
கௌரவ மாநகர சபை உறுப்பினர் எம்.ஐ.எம்.பிர்தௌஸ் சகிதம் பள்ளிவாசல் குழு முயன்றபோது
அதனையும் அமைச்சர் அவர்கள் உடனடியாக நிராகரித்தார்கள்.
ஏன் இவ்வாறு அமைச்சர் அவர்கள் நடந்து கொண்டார்கள் என்பதுதான் பள்ளிவாசல்
மரைக்காயர்களினதும் அந்த ஊர் மக்களினதும் கேள்வி "உண்மையைப் பேசுவோம் அரசியலுக்கு அல்லாமல்
நீதி நியாயத்துடன் செயல்பட்டு மரணிப்போம்"
===========================================================================
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.