கட்சிக்கு இக்கட்டான நிலை ஏற்படும் வரை
சாய்ந்தமருது மக்கள் தனியான உள்ளூராட்சி
மன்றத்திற்கு
காத்திருக்கத்தான்
வேண்டும்
கட்சிக்கும் கட்சித் தலைமைகளுக்கும் இக்கட்டான ஒரு நிலை ஏற்பட்டு சாய்ந்தமருதுக்கு பிரதேச செயலகம் அன்று கிடைத்தது போன்று தனியான
உள்ளூராட்சி மன்றம் ஒன்றுக்கும் அந்த ஊர் மக்கள் காத்திருக்க வேண்டும்.
மயோன் முஸ்தபா அவர்கள் தேர்தலில் குதித்து கட்சிக்கு ஒரு இக்கட்டான
நிலை ஏற்பட்ட போதுதான சாய்ந்தமருதுக்கு அன்று தனியான பிரதேச செயலகம் கிடைத்தது
என்பதை எவரும் மறந்து விடமுடியாது.
மீண்டும் அப்படி ஒரு இக்கட்டான நிலை கட்சிக்கு ஏற்படும் வரை
சாய்ந்தமருது மக்கள் தனியான உள்ளூராட்சி மன்றத்திற்காக காத்திருக்கத்தான் வேண்டும்
போல் தெரிகின்றது.
சாய்ந்தமருதுக்கு தனியான பிரதேச செயலகம் முஸ்லிம்
காங்கிரஸினால் விரும்பி வழங்கப்பட்ட ஒன்றல்ல இதற்கு ஒரு சம்பவம் (முழக்கம் மஜீத்
அவர்கள் சாட்சி) அந்த ஊர் பிரமுகர்கள் 40 பேருக்கும் கூடுதலாக மர்ஹும் அஷ்ரப் அவர்களை பிரதேச செயலகம்
விடயமாக அன்னாரின் கல்முனைக் காரியாலயத்தில் சந்தித்த போது சந்தித்தவர்களை இணிப்பு
பாணங்கள் வழங்கி நன்கு ஆதரித்துவிட்டு இன்று சாய்ந்தமருதில் ஒரு பொதுக்கூட்டத்தில்
பேசவுள்ளேன் அதில் இதுபற்றி மக்களுக்கு தெளிவு படுத்துவேன் எனக் கூறியதுமல்லாமல்
எந்த விடயமாக இருந்தாலும் எதிர்காலத்தில் சாய்ந்தமருது சென்ரல் கமிட்டி (மத்திய குழு) மூலமாகவே என்னிடம் வாருங்கள் என்றும் வேண்டுகோள் ஒன்றையும் விடுத்தார். அந்த
சந்தர்ப்பத்தில் ஊர் சார்பாக சென்றிருந்த ஒருவர் மர்ஹும் அஷ்ரப் அவர்களைப்
பார்த்து உங்களிடம் இரண்டு கேள்விகள் கேட்க முடியுமா? என அன்னாரிடம் அனுமதி பெற்று
உங்களின் சாய்ந்தமருது சென்ரல் கமிட்டி என்பவர்கள் யார்? இதன் காரியாலயம் எங்கிருக்கிறது ? என்று கேட்டவுடன் அன்னாரின் பக்கத்தில் இருந்த
முழக்கம் மஜீத் அவர்களிடம் காதுக்குள் ஏதோ பேசிவிட்டு எமது சென்ரல் கமிட்டி தலைவர்
புர்க்கான் அவர்கள். எங்களுக்கு தற்போதைக்கு சாய்ந்தமருதில் காரியாலயம் இல்லை என்ற
பதில் கிடைத்தது. பின்னர், அன்று மாலை இடம்பெற்ற பொதுக் கூட்டத்தில் சாய்ந்த்மருது, மாளிகைக்காடு இணைந்த ஒரு பிரதேச செயலகத்தையே
நான் கனவு காண்கின்றேன் என்று இதற்கான பல விளக்கம்களை எடுத்து வைத்துப் பேசினார்.
சாய்ந்தமருதுக்கு பிரதேச செயலகம் கிடைக்கவில்லை,
கிடைக்கப்போவதுமில்லை என்ற காரணத்தினால்
பொதுத்தேர்தலில் அந்த ஊர் மக்கள் கட்சிக்கு எதிர்ப்பைக் காட்டத் தொடங்கினார்கள்.
மர்ஹும் றிஸ்வி சின்னலெவ்வை அவர்களுக்கு சாய்ந்தமருது மக்கள் முஸ்லிம்
காங்கிரஸுக்கு எதிராகச் செயல்பட்டு மயோன் முஸ்தபா அவர்களுக்கு ஆதரவளிப்பதற்கு
முனைகின்றார்கள். மயோன் முஸ்தபா அவர்கள்கூட இதனை தனது அரசியலுக்கு சாதகமாகப் பயண்படுத்தி வருகின்றார்
என்பதும் அன்னாருக்கு தெரியவந்தது. இதனைத் தடுப்பதாக இருந்தால் சாய்ந்தமருதுக்கு உடனடியாக
தனியான பிரதேச செயலகம் வழங்கியாக வேண்டும் என்று திடமாகக் கருதி அதனை மர்ஹும்
அஷ்ரப் அவர்களிடம் கூறி மக்களின் கோரிக்கைக்கும் தேவைக்கும் அல்லாமல் அரசியலில் வெற்றி பெறும்
ஒரே நோக்கம் கருதி அன்று வழங்கப்பட்டதே சாய்ந்தமருது பிரதேச செய்லகம் என்பது
மக்களுக்கு தெரியும்.
இதே போன்று ஒரு நிலை கட்சிக்கும், கட்சித் தலைமைகளுக்கும் ஏற்படும்
வரை சாய்ந்தமருது மக்கள் தனியான உள்ளூராட்சி மன்றம் ஒன்றுக்கு காத்திருக்கத்தான்
வேண்டும் போல் தெரிகின்றது.
0 comments:
Post a Comment