காதோடு காதாக*.*.*.*.*.
திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில்
சாய்ந்தமருதுக்கு நகராட்சி அந்தஸ்து கிடைக்காமல் தடுக்கப்பட்டதால்
அந்த ஊர் மக்களின் ஆதரவைப் பெறுவதற்கு முஸ்லிம் காங்கிரஸுக்கு எதிரான கட்சியினர் சாய்ந்தமருதில்
செல்வாக்கான அரசியல் பிரமுகர்களை வளைத்துப் போடுவதற்கு கங்கணம்கட்டிக் கொண்டு இருக்கின்றனராம்.
எதிர்வரும் பொதுத் தேர்தலில் வெற்றி வாய்ப்பு குறைவாக உள்ள ஒரு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உலமாக்கள் மற்றும் பள்ளிவாசல் பிரமுகர்களிடம் சம்மதம் கேட்பது போல் செயல்பட்டாலும் அவரின் நோக்கம் தேசியப்பட்டியல் மூலமாக நாடாளுமன்றம் புகும் விருப்பமாகத்தான் உள்ளதாம்.
கிழக்கு மாகாண அமைச்சர் ஒருவர் பொதுத் தேர்தலில் போட்டியிட்டு நாடாளுமன்றம் புகும் ஆசையால் தனது பதவியை மற்றொருவருக்கு விட்டுக் கொடுப்பதற்கு முன் வந்திருக்கின்றாராம். அதற்குப் பரிகாரமாகப் பதவியைப் பெறுபவர் வேட்பாளர் தெரிவில் இவருக்கு ஆதரவாகச் செயல்பட வேண்டும் என்று கேட்கப்பட்டிருப்பாதாவும் செய்திகள் கசிந்துள்ளன.
சாய்ந்தமருதுக்கு நகராட்சி அந்தஸ்து கிடைக்காமல் போனதால் அந்த ஊர் மக்கள் குறிப்பிட்ட முஸ்லிம் கட்சி மீதும் கட்சித் தலைவர் மீதும் ஆத்திரம் கொண்டிருப்பதுடன் கவலையுடனும் இருந்து கொண்டிருக்கின்றனர் அல்லவா? அம்மக்களை திருப்தி செய்வதற்கு அந்த ஊரைச் சேர்ந்த மாகாண சபை உறுப்பினர் ஒருவருக்கு கட்சித் தலைவர் (GIFT) வெகுமதி ஒன்றை வழங்க காத்திருக்கின்றார் என்ற செய்தியும் கசிந்து எமக்கு வந்திருக்கிறது. கட்சித் தலைவர் வழங்கும் (GIFT) வெகுமதியா? அல்லது மக்கள் சக்தியா? இது விடயத்தில் வெல்லப் போகின்றது என்பதைப் பொறுத்திருந்துதான் மக்கள் பார்க்க வேண்டும்.
கட்சிக்கு கழுத்தறுப்புக்கள் இக்கட்டான சூழ் நிலைகள் ஏற்பட்டுள்ளது எனக் காரணங்களைக் கூறி கட்சியைக் காப்பாற்றுவதானால் கட்சியின் தலைமை திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில்தான் முகம் கொடுக்க வேண்டும் என்ற நிலை ஏற்படலாம் எனத் தெரிவிக்கப்படுகின்றது. அப்படியான ஒரு சூழ்நிலையை
தோற்றுவிற்று கட்சித் தலைமை திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில்தான்
போட்டியிட வேண்டிய நிலைமையை எதிர்பார்க்கலாம்.
திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் அமைச்சர் றிஷாத் பதியுதீனின் கட்சி, முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாஉல்லாவின் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி என்பனவற்றில் முஸ்லிம்கள் போட்டியிடுவதால் முஸ்லிம் காங்கிரஸுக்கு பலத்த போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதனால் முஸ்லிம் காங்கிரஸுக்கு தற்போதய விகிதாசார தேர்தல் முறையில் ஒரு ஆசனம் மட்டுமே கிடைக்கும் என அரசியல் அவதானிகள் கூறுகின்றனர். அது யார்? மாவட்டத்திலுள்ள ஒருவரா? கட்சியின் தலைவரா?
0 comments:
Post a Comment