பொதுத் தேர்தலில் முகம் கொடுப்பது
எப்படி?
முடிவுகளை எடுப்பதற்காக முஸ்லிம் காங்கிரஸ் நாளை கூடுகிறது
நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் முகம் கொடுப்பது எவ்வாறு
என்பது குறித்து ஆராய்வதற்காக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீடம் நாளை
கூடுகின்றது என அறிவிக்கப்படுகின்றது.
நாடாளுமன்றத்திற்கு புதிய உறுப்பினர்களைத் தெரிவு
செய்வதற்காக எதிர்வரும் ஜூலை மாதம் 06 ஆம் திகதி
தொடக்கம் வேட்புமனுத்தாக்கல் செய்யப்படவுள்ளது. இந்த நிலையிலேயே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினால்
இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது
எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்
கூட்டுச் சேர்ந்து போட்டியிடுவதா அல்லது தனித்துப் போட்டியிடுவதா என்றும் கூட்டுச்
சேர்ந்து போட்டியிடுவதாக இருந்தால் எந்தக் கட்சியுடன் இணைந்து போட்டியிடுவது
என்பது குறித்தும் நாளை கூடும் கூட்டத்தில் பேசப்படவுள்ளதாகத்
தெரிவிக்கப்படுகின்றது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து
பல மாவட்டங்களில் போட்டியிட ஏற்கனவே தீர்மானித்துள்ளதாக செய்திகள் தற்போது வெளியாகியுள்ளன.
இதுமாத்திரமல்லாமல், பொதுத் தேர்தலில் முஸ்லிம் கங்கிரஸ் ஐக்கிய தேசியக்
கட்சியுடன் சங்கமமாக இருக்கப் போகின்றது என்பதை முஸ்லிம் காங்கிரஸைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி (Rizvi Jawharsha) றிஸ்வி ஜவஹர்ஷா தனது முகநூலில்
வெளியிட்டுள்ள தேர்தல் விளம்பரம் ஒன்றும் சொல்லாமல் சொல்லுகின்றது.
இது தொடர்பாக இறுதிமுடிவை எட்ட இந்த அவசர உயர்பீட
கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதுடன் எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா
முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக போட்டியிடவுள்ள வேட்பாளர்கள் குறித்தும்
ஆராயப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்படுகின்றது.
0 comments:
Post a Comment