அமைச்சர் ஹக்கீமின் ஊடகவியலாளர் மாநாட்டில்
சாய்ந்தமருது பிரதேச சபை பற்றி


சாய்ந்தமருது பிரதேச சபை பற்றி ஊடகவியலாளர் ஒருவர் கேள்வியெழுப்பினார்.
அதற்குப் பதிளித்த அமைச்சர் ஹக்கீம்,சாய்ந்தமருது பிரதேச சபையைப் பொறுத்தவரை,நாட்டிலுள்ள உள்ளுராட்சி சபைகளின் எல்லைகளை மீள்நிர்ணயம் செய்கின்ற குழுவின் அறிக்கை உரிய அமைச்சரினால் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது.

அதை வர்த்தமானியில் பிரசுரித்த பின்னர் தான் மீண்டும் எல்லைகளை மீள்நிர்ணயம் செய்யும் விஷயத்தில் நடவடிக்கை எடுக்க முடியும் என்பதை பொதுநிர்வாக உள்நாட்டல்கள் அமைச்சின் செயலாளர் தடல்லகே அதிலுள்ள நியாயங்களை எங்களுக்கு சொல்லியிருக்கிறார். அவ்வாறன வர்த்தமானி அறிவித்தலின் பின்னர் தான் சம்பந்தப்பட்ட அமைச்சு நடவடிக்கை எடுக்கும். அதற்காக நாங்கள் முழு முயற்சி செய்வோம். இதை காழ்ப்புணர்ச்சியோடு அரசியல் காரணங்களுக்காக எவர் எதைச் செய்தாலும், சாய்ந்தமருது பிரதேச சபையை நிறுவுகின்ற விஷயத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முனைப்புடன் செயல்படுகின்றது என்ற விஷயத்தை நான் சொல்லியாக வேண்டுமென்றார்.
இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் இராஜாங்க அமைச்சரும், கட்சியின் செயலாளர் நாயகமுமான எம்.ரீ.ஹஸனலி, பாராளுமன்ற உறுப்பினர்களான பைசல் காசீம், முத்தலிப் பாவா பாறுக், எம்.எஸ்.எம்.அஸ்லம், முன்னாள் அக்கரைப்பற்று மாநகர சபை எதிர்க்கட்சித் தலைவர் எஸ்.எல்.எம்.ஹனிபா (மதனி), அமைச்சரின் இணைப்புச் செயலாளர் ரஹ்மத் மன்சூர் ஆகியோரும் பங்குபற்றினர்.


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top