சவூதி கூட்டுப்படை வான்வழித் தாக்குதல்
ஏமனில் பண்டைய
இஸ்லாமியக் கலாசார கட்டடங்கள் தரைமட்டம்
ஏமன் தலைநகர் சனாவில்,
யுனெஸ்கோ அமைப்பால்
பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்ட பகுதியில் சவூதி
தலைமையிலான கூட்டுப் படையினர் வெள்ளிக்கிழமை நிகழ்த்திய
விமானத் தாக்குதலில்
புராதனக் கட்டடங்கள்
தரைமட்டமாயின. 5 பேர் கொல்லப்பட்டனர் என அறிவிக்கப்படுகின்றது. இத்தாக்குதலுக்கு யுனெஸ்கோ அமைப்பு
கடும் கண்டனம்
தெரிவித்துள்ளது.
ஏமனில்
ஹூதி பழங்குடியினக்
கிளர்ச்சியாளர்கள், தலைநகர் சனா
உட்பட அந்த நாட்டின்
கணிசமான பகுதிகளை
கடந்த ஆண்டு
கைப்பற்றினர்.
இதையடுத்து,
அந்த நாட்டு
அதிபர் அபெத்
ரப்போ மன்சூர்
ஹாதி, ஏடன்
நகருக்குத் தப்பிச் சென்றார். எனினும் ஹூதி
கிளர்ச்சியாளர்கள் ஏடன் நகரையும்
நோக்கி முன்னேறியதைத்
தொடர்ந்து மன்சூர்
ஹாதி சவூதி
அரேபியாவில் தஞ்சமடைந்தார்.
ஏமனில்
ஷியா பிரிவைச்
சேர்ந்த ஹூதி
கிளர்ச்சியாளர்களின் கை ஓங்குவதை
விரும்பாத, சன்னி பிரிவினரைப் பெரும்பான்மையாகக் கொண்ட சவூதி அரேபியா, ஒன்பது
அரபு நாடுகளின்
கூட்டணியை அமைத்து
கிளர்ச்சியாளர்கள் மீது கடந்த
மார்ச் மாதம்
முதல் வான்வழித்
தாக்குதல் நிகழ்த்தி
வருகிறது.
இந்தத்
தாக்குதல்களில் பொதுமக்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர்.
இந்த
நிலையில், பழைய
சனா நகரில்
சவூதி தலைமையிலான
கூட்டுப் படையின்
விமானங்கள் வெள்ளிக்கிழமை அதிகாலை தாக்குதல் நிகழ்த்தின.
அந்த
நகரின் காஸிமி
பகுதியில் கூட்டுப்
படை விமானம்
ஏவுகணை வீசியதில்
மூன்று அடுக்குகளைக்
கொண்ட மூன்று
பாரம்பரியக் கட்டடங்கள் தரைமட்டமாயின. இதில் 5 பேர்
உயிரிழந்தனர்.
விமானம்
வீசிய ஏவுகணை
வெடிக்கத் தவறியதாகவும்,
அது வேகமாக
விழுந்ததால் ஏற்பட்ட அதிர்ச்சியில் கட்டடங்கள் நொறுங்கியதாகவும்
சம்பவத்தை நேரில்
பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். அந்த ஏவுகணை
வெடித்துச் சிதறியிருந்தால், மேலும் பல கட்டடங்கள்
சேதமடைந்திருக்கும் எனக் கூறப்படுகிறது.
2,500 ஆண்டுகள் பழைமை வாய்ந்த பழைய
சனா பகுதியில்
11-ஆம் நூற்றாண்டுக்கு
முன்பு கட்டப்பட்ட
6,000 கட்டடங்கள், 100 மசூதிகள், 14 பொதுக்
குளங்கள் ஆகியவை
உள்ளன.
பண்டைய
இஸ்லாமியக் கலாசாரத்தின் மையமாக விளங்கும் இந்த
நகரை, யுனெஸ்கோ
அமைப்பு பாரம்பரியச்
சின்னமாக கடந்த
1986-ஆம் ஆண்டு
அறிவித்தது.
இந்தச்
சம்பவத்துக்கு யுனெஸ்கோ அமைப்பின் தலைமை இயக்குநர்
ஐரீனா போகோவா
கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து
அவர் கூறியிருப்பதாவது:
பழைய
சனா நகரில்
சவூதி படைகளின்
விமானத் தாக்குதலில்
உயிரிழப்பு ஏற்பட்டது குறித்து மிகவும் வேதனையடைந்தேன்.
அந்தத்
தாக்குதலில் இஸ்லாமிய நகரப் பண்பாட்டின் மிகப்
பழமையான சின்னங்கள்
தரைமட்டமாக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. அந்த நகரில் வரலாற்றை பறைசாற்றிக்
கொண்டிருந்த பொக்கிஷங்கள் மீட்கவே முடியாத அளவுக்கு
அழிக்கப்பட்டுள்ளன என்று தெரிவித்துள்ளார்
.
0 comments:
Post a Comment