அடுத்த தேர்தலில் போட்டியிட வேண்டுமா?இல்லையா?
உலமாக்களும்,பள்ளிவாசல் நிர்வாகத்தினருமே
தீா்மானிக்க வேண்டுமாம்!
பாராளுமன்ற
உறுப்பினர் ஹரீஸ் சம்மதம் கேட்கின்றார்
அடுத்த பாராளுமன்றத் தேர்தல் என்பது சவாலான ஒரு விடயமாகும். தான் திறந்த மனதுடன் இருக்கின்றேன். நான் போட்டியிட வேண்டும் என்று ஆசை ஆர்வத்தில் கட்சியின் தலைமைத்துவத்திடம் இன்னும் பேசவில்லை. ஏன், என்றால் இது ஒரு அமானிதம். இதனை இந்த சபையிடம் ஒப்படைக்கின்றேன். வருகின்ற தேர்தலில் நான் போட்டியிட வேண்டுமா? இல்லையா? என்பதை இந்த சபை தீர்மானிக்க வேண்டும்.இது சம்பந்தமாக உங்களிடம் மாற்றுக் கருத்துக்கள் இருந்தால் வெளிப்படையாக தெரிவியுங்கள். இந்த சபை எடுக்கின்ற முடிவுக்கு கட்டுப்பட தயாராக இருக்கின்றேன். இவ்வாறு பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் தெரிவித்துள்ளார்
கல்முனையில் உள்ள உலமாக்கள், பள்ளிவாசல் சமூகத்தினர் ஆகியோர்களுக்கும் பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் அவர்களுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று கடந்த 23 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை) அல் அஸ்ஹர் வித்தியாலயத்தில் இடம்பெற்றது இச் சந்திப்பிலேயே பாராளுமன்ற உறுப்பினர்
ஹரீஸ் இந்த வேண்டுகோளை விடுத்தார்.
பாராளுமன்றம் கலைக்கப்பட்டதன் பின்னரான செயற்பாடுகள் குறித்து இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டது. கடந்த காலத்தில் கல்முனையில் எதிர்கொண்ட சவால்கள் மற்றும் அபிவிருத்திப் பணிகள் குறித்தும் இங்கு ஆராயப்பட்டது.
பாராளுமன்றம் கலைக்கப்பட்ட பின்புள்ள புதிய அரசியல் சூழ்நிலை சம்பந்தமாக பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் கூறுகையில்,
தனது நிலைப்பாடாக கல்முனைத் தொகுதி மக்களின் பாராளுமன்ற உறுப்பினர் பதவி என்பது முஸ்லிம் காங்கிரஸ் கட்சி ஊடாகவே மட்டும்தான் அடைய முடியும் .
ஜனாதிபதித் தேர்தலின் பின்பு தான் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கான எந்தத் தீவிர அரசியல் ஈடுபாட்டிலும் ஈடுபடாமல் சற்று அமைதியாக ஒதுங்கியவனாக இருந்து கொண்டிருக்கின்றேன்.
அடுத்த பாராளுமன்றத் தேர்தல் என்பது சவாலான ஒரு விடயமாகும். தான் திறந்த மனதுடன் இருக்கின்றேன். நான் போட்டியிட வேண்டும் என்று ஆசை ஆர்வத்தில் கட்சியின் தலைமைத்துவத்திடம் நான் பேசவில்லை.
ஏன், என்றால் இது ஒரு அமானிதம். இதனை இந்த சபையிடம் ஒப்படைக்கின்றேன். வருகின்ற தேர்தலில் நான் போட்டியிட வேண்டுமா? இல்லையா? என்பதை இந்த சபை தீர்மானிக்க வேண்டும்.இது சம்பந்தமாக உங்களிடம் மாற்றுக் கருத்துக்கள் இருந்தால் வெளிப்படையாக தெரிவியுங்கள். இந்த சபை எடுக்கின்ற முடிவுக்கு கட்டுப்பட தயாராக இருக்கின்றேன்.
என்னுடைய அரசியல் வாழ்க்கையில் இந்தப் பதவிக்குத்தான் நான்தான் வரவேண்டும் என்பதில் ஆசைப்பட்டவனாக இல்லை. திறந்த மனதுடன் இருக்கின்றேன். முஸ்லிம் சமூகத்தினதும், மாவட்ட மக்களினதும் என்மீதான எதிர்பார்ப்பிற்கு மத்தியில் இந்த சபை எடுக்கின்ற முடிவுக்கு இணங்கி செயற்பட தயாராக உள்ளேன்.
நான் அழுத்தமாக கூறுகின்ற விடயம் தேர்தலில் போட்டியிடுவது சம்பந்தமாக எந்தத் தீர்மானமும் இல்லாமல் இருந்து கொண்டிருக்கின்றேன் என்பதைகூறிக்கொள்ள விரும்புகின்றேன்.
கடந்த ஐந்து வருட பாராளுமன்ற காலப்பகுதியில் மிக முக்கியமான சவால்கள் இருந்தது. அதில் கல்முனை நகர பிரச்சினை பூதாகரமாக இருந்தபோது அதற்கு முகம்கொடுத்து மிகக் கவனமாக செயற்பட்டதனால் கல்முனை நகர் பாதுகாக்கப்பட்டது.
அதேபோன்று கல்முனைத் தொகுதியின் அபிவிருத்திக்கும் எனது சக்திக்கு உட்பட்ட வகையில் பல்வேறு விதமான அபிவிருத்தி திட்டங்களை செய்திருக்கின்றேன். எனினும் அபிவிருத்திகள் இன்னும் கூடுதலாக இடம்பெற வேண்டும் என்ற எதிர்பார்ப்பும், ஆதங்கமும் உங்கள் மத்தியிலும், மக்கள் மத்தியிலும் இருப்பதால் பாராளுமன்ற உறுப்பினர் என்றபடியால் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே என்னால் செய்ய முடியும் என்பதை புரிந்து கொள்ள முடியும்.
இவ்வாறு என்னுடைய இந்தக் கல்முனைத் தொகுதியில் மட்டுமல்ல வாக்களித்த எல்லா முஸ்லிம் பகுதிகளுக்கும் அபிவிருத்தி செய்ய வேண்டும் என்ற கடமை எனக்கு உள்ளது என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். அந்த வகையில் ஒரளவு திருப்தியடைந்துள்ளேன்.
எனவே, நான் அடுத்த தேர்தலில் போட்டியிட வேண்டுமா? இல்லையா? என்பதை உலமாக்களும், பள்ளிவாசல் நிர்வாகத்தினருமே தீா்மானிக்க வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் இங்கு வேண்டுகோளையும் விடுத்தார்.
இந்த கூட்டத்தில் அம்பாரை மாவட்ட அனைத்துப் பள்ளிவாசல் சம்மேளனத்தலைவரும், கல்முனை அனைத்து பள்ளிவாசல் மற்றும் பொது நிறுவனங்களின் தலைவருமான டாக்டர். எஸ்.எம்.ஏ.அஸீஸ், கல்முனை தௌஹித் பள்ளிவாசல் தலைவர் செய்லாப்தீன் ஹாஜியார், ஜம்இய்யத்துல் உலமா சபைத் தலைவர் சுல்தான் ஹஸரத், சுன்னத்துல் ஜமாத் உலமா சபைத் தலைவர் ஜெலீல் மௌலவி மற்றும் ஜம்இய்யத்துல் உலமா சபையின் உப தலைவர் நதீர் மௌலவி அதன் செயலாளர் மஜீத் மௌலவி, கல்முனை மாநகர சபை உறுப்பினர் பரக்கத்துல்லா, மசுரா குழுத்தலைவர் கரீம் ஹாஜியார் அத்துடன் சிரேஸ்ட உலமாக்கள்,பள்ளிவாசல் நம்பிக்கையாளர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
0 comments:
Post a Comment