நீதி மன்றம் போக வேண்டியது மறிச்சுக் கட்டிப் பிரச்சினைக்கே
20வது திருத்தச் சட்டத்திற்கு எதிராக அல்ல
-
தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சி
20வது
திருத்தச் சட்டத்திற்கு எதிராக உயர் நீதிமன்றம் செல்வோம்: அமைச்சர் ஹக்கீம் எச்சரிக்கை
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் எதிர்ப்பையும் மீறி தற்போது முன்வைக்கப்பட்டுள்ள
யோசனைக்கு அமைய 20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை கொண்டு வந்தால், அதற்கு எதிராக
உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய போவதாக அதன் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம்
தெரிவித்துள்ளார்.
நீதி மன்றம் போக வேண்டியது மறிச்சுக் கட்டிப்
பிரச்சினையை தீர்த்து வைக்க 20வது திருத்தச் சட்டத்திற்கு எதிராக அல்ல.
கட்சியைப்
பாது காத்து மக்களின் காய்ச்சலில் குளிர் காய துடிப்பது ஒரு நல்ல அரசியல் வாதிக்கு
அழகல்ல என தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சி இங்கு கூறிக் கொள்ள விரும்புகிறது.
மேலும்
மறிச்சுக் கட்டிப் பிரச்சினையை தீர்த்து வைக்க நீதி மன்றத்தை நாடும் படியும் மக்களைக்
கேட்டுக் கொள்கிறது அத்துடன் அல்லாது உரிய அதிகார ஆவணம்களை தொலைக்காட்சி முன் வீசி
எறிவதை விட நீதி மன்றம் முன் எடுத்து வையுங்கள்-
கை எழுத்து பெற்று சாதிப்பது ஒன்றும் அல்ல என்பதையும் இங்கு சுட்டிக் காட்ட விரும்புகின்றோம்
இவ்வாறு தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சி தெரிவித்துள்ளது.
0 comments:
Post a Comment