20 ஆவது திருத்தம் தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு

புதிய தேர்தல் முறைமைக்கான வழிகாட்டல் மட்டுமே

– ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன

அரசியல் யாப்பின் 20ஆவது திருத்தத்துடன் தொடர்புடைய வர்த்தமானி அறிவித்தல் ஒரு புதிய தேர்தல் முறைமைக்கான வழிகாட்டல் மட்டுமே என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஒரு முறையான சிறந்த தேர்தல் முறைமையை அமைப்பது கடினமான பணி என்பதோடு, அது ஒரு புதிய அரசியல்யாப்பை வடிவமைப்பதனை விடவும் சவால் மிக்கது என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
கொட்டிகாவத்தை பிரதேச சபையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட நிருவாகக் கட்டிடத் தொகுதியைத் திறந்துவைத்து உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
அரசில்யாப்பின் 20ஆம் திருத்தம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டிருப்பதனூடாக இந்த இலக்கை அடைந்துகொள்வதற்கான கருத்துக்கள் முன்மொழிவுகளை முன்வைப்பதற்கான ஒரு தளம் திறக்கப்பட்டிருப்பதாக ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டார்.
அரசாங்க வர்த்தமானி அறிவித்தல் உறுப்புரைகள் இறுதியான கருத்துக்கள் அல்ல. அவை பாராளுமன்றம், நீதிமன்றம், அல்லது சமூகத்தில் விவாதிக்கப்பட முடியுமானவை என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
எல்லா சமூகங்களையும் சேர்ந்த மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்குத் தேவையான வகையில் முன்மொழியப்பட்டுள்ள அரசியல் சீர்திருத்தத்திற்கு அடிப்படையான உறுப்புரைகளை எவரும் முன்மொழிய முடியும் என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
இந்த  தேர்தல் சீர்திருத்தம் பாராளுமன்றத்தில் அங்கத்துவம் வகிக்கும் சிறிய அரசியல் கட்சிகளுக்கும் நாட்டிலுள்ள பிரதான அரசியல் கட்சிகளுக்கும் நீதியை உறுதிப்படுத்துகிறது என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
தற்போது நடைமுறையிலிருக்கும் அரசியல்யாப்பின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள விருப்புவாக்கு முறைமையானது  அநாகரீகமான அரசியல் கலாசாரத்திற்கு வழிவகுத்துள்ளதாகத் தெரிவித்த ஜனாதிபதி, பண்பாடும் மதிப்பும்வாய்ந்த அரசியல் கலாசாரத்தைத் தோற்றுவிப்பதற்கு நடைமுறையிலிருக்கின்ற தேர்தல் முறைமையையும் விருப்புவாக்கு முறைமையையும் நாம் மாற்றியாக வேண்டும் என்றும் தெரிவித்தார்.

அமைச்சர் கரு ஜயசூரிய, கொட்டிகாவத்தை முல்லேரியா  பிரதேச சபைத் தலைவர் பிரசன்ன சோலங்காரச்சி மற்றும் பிரதிநிதிகளும் இந்நிகழ்வில் பங்குபற்றினர்.







0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top