சுயநல அரசியல் காய் நகர்த்தல்கள்
சாய்ந்தமருதின் அபிவிருத்திக்கு குந்தகம்?

டாக்டர் எம்.ஐ.எம்.ஜெமீல் அவர்களின் சுயநல அரசியல் காய் நகர்த்தல்கள் சாய்ந்தமருதின் அபிவிருத்திக்கு குந்தகம்? என்ற கட்டுரையும் இது குறித்து  முகநூல் நண்பர்களின் கருத்துக்களில் சிலவும் ......


புதிய அரசாங்கத்தின் 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் ருபா 30 மில்லியன் செலவில் ஆரம்பிக்கப்பபட்டுள்ள சாய்ந்தமருது தோணா அபிவிருத்தி வேலைகளின் ஆரம்ப நிகழ்வுகளை குழப்ப எடுத்த முயற்சிகள் அதன்பின்னர்; தோணா வேலைத்திட்ட பெயர் பலகையை அசிங்கப்படுத்தியமை தற்போது தோணாவின் பெரும்பகுதி சுத்தமாக்கப்பட்டுள்ள நிலையில் தோணாவோரம் மீண்டும் குப்பைகள் கொட்டப்படுவது போன்ற செயல்கள் சாய்ந்தமருதின் அபிவிருத்திக்கு குந்தகம் விளைவிப்பதற்கான சுயநல அரசியல் காய் நகர்த்தல்களா? என்று கேட்கத் தோன்றுகின்றது.
அரசின் 100 நாள் வேலைத்திட்;டத்தின் கீழ் சாய்ந்தமருதில் நடைபெற வேண்டிய வேலைகளைத் திட்டமிடவும் கண்காணிக்கவும் தெரிவுசெய்யப்பட்ட குழுவும் தற்போது செயலற்றதாக ஆக்கப்பட்டுள்ளது. தோணா அபிவிருத்தி வேலைகளின் அங்குரார்ப்பண நிகழ்வு தொடர்;பான சகல முயற்சிகளையும் இக்குழுவே மேற்கொண்டதோடு தோணாவின் அயலில் வாழும் மக்களுக்கு தோணா அபிலிருத்தி தொடர்பாகவும் சுற்றாடலைப். பேணுவது தொடர்பாகவும் அறிவுட்டல்கள் செய்வதற்கும் அபிவிருத்தி வேலைகளின் தரத்தைக் கண்காணிக்கவும் திட்டமிட்டிருந்த வேளையிலேயே இக்குழுவின் செயற்பாடுகள் முடக்கப்பட்டுள்ளது. இதற்கு யார் காரணம்?
தோணா அபிவிருத்தியின் முதற் கட்டமாக தோணாவை அகழ்வு செய்து துப்பரவாக்கும் வேலைகள் தற்போது நடைபெற்று வருகின்றது. அதன் பின்னர் பாதுகாப்புச் சுவர்கள் தோணாவின் இருமருங்கிலும் கட்டப்படவுள்ளன. அத்துடன் கடல் நீரை தோணாவுக்குள் செலுத்துவதற்கும் தோணாவிலிருந்து நீரை கடலுக்குள் செலுத்துவதற்குமாக மூடித் திறக்கக் கூடிய பெரிய அளவிலான குழாய்கள் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்து.
இதன் பின்னர் முகத்துவாரத்திற்கும் வைத்தியசாலை வீதிக்கும் இடைப்பட்ட தோணாவின் பகுதி படகுகள் தரிப்பு நிலையமாகவும் பாரிய வர்த்தக வலயமாகவும் பொழுது போக்கிடமாகவும் மாற்றப்படும்.
வைத்தியசாலை வீதியிலிருந்து மாளிகைக்காடுவரை தோணாவின் இருமருங்கிலும் நடைபாதைகள அமைக்கப்பட்டு  பூ மரங்கள், ஆசனங்கள்,குடிநீர் வசதிகள், குப்பை போடும் வசதிகள் என்பனவற்றோடு ஒரு நீண்ட பூங்கா அமைக்கப்படும்.
(இவற்றின் மாதிரியை இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படங்களில் காணலாம்)
எனவே எதிர்காலத்தில் சுய நல செயற்பாடுகளுக்கு இடம் கொடாமல் இத்தோணா அபிவிருத்திக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கி சுத்தமான சுற்றாடல் கொண்டதும் மக்களின் பொருளாதார மேம்பாட்டிற்கு உதவக்கூடிய வளங்களைக் கொண்டதுமான பிரதேசமாக இத் தோணாவை அண்மித்த பகுதியை மாற்ற முயல்வோம்.
டாக்டர். எம்..எம். ஜெமீல்
தலைவர், சிரேஸ்ட பிரஜைகள் ஒன்றியம்,
சாய்ந்தமருது.



Maruthoor Mahan

இந்தக் கட்டுரையை எழுதிய டாக்டர் ஜெமீலின் நோக்கம் என்னவென்று தெரியவில்லை.
உள்ளார்ந்த ஒரு ஆதரவு நோக்கை வைத்து எழுதியது போலத்தெரிகிறது.
முதலில், முப்பது மில்லியன் ருபா செலவிலான திட்டம் என்றால், இதுவரை டாக்டரே நீங்கள் அந்தத் திட்டத்தின் வரைபடத்தையோ அல்லது திட்ட நகலையோ கண்ணால் கண்டிருக்கிறீர்களா?
தோணா அபிவிருத்திக்கான நிதியைத் தேடுவதில் றவுப் ஹக்கீம் மும்முரம் என்று சொல்லப்படுகிறதே. அப்படியானால், நிதி இல்லாமலே அவசர அவசரமாக ஆரம்பிக்கப்பட்டதா?
அந்தத் திட்டத்துக்குப் பொறுப்பானவர்களுக்கே அதன் விபரங்கள் இன்னும் தெரியாதாம் என்கிறார்களே. அப்படியானால் உங்களுக்கு மட்டும் எங்கிருந்து கிடைத்தது இந்த விபரங்கள்?
நீங்கள் சொல்வது போன்று தோணாவை விருத்தி செய்ய இப்போதிருக்கின்ற இடம் போதுமா அல்லது அயலிலுள்ள நிலங்களையும் எடுக்கவிருக்கிறார்களா?
நீங்கள் பதிவேற்றியுள்ள வெளிநாட்டுப் புகைப்படங்கள் பார்ப்பதற்கு அழகாகத் தான் இருக்கின்றன. இப்படி இருந்தால் நல்லம் என்று நினைக்கிறீர்கள். ஆனால், இருக்கின்ற இடப்பரப்பில் இதனை செய்வது சாத்தியாகுமா?
திடீரென்று அரசியல்வாதிகள் சொல்வதைப்போன்று உங்களின் கட்டுரை அமைந்திருக்கிறது. இதனை உங்களிடமிருந்து எதிர்பார்க்கவில்லை டாகடர்.
நான் பிடித்த முயலுக்கு மூன்று கால்கள் என்றில்லாமல், கொஞ்சம் யதார்த்தமாகவும் யோசியுங்கள்.
இவற்றைச் சொல்வதன் மூலம் நாங்களும் அதனை எதிர்க்கின்றோம் என்று எண்ணிவிடாதீர்கள். யதார்த்தமாகப் பார்த்தால் இன்று வரை நமது தோணா விடயத்தில் நடப்பதெல்லாம் மர்மமாகவே இருக்கின்றது.
சரியான திட்ட வரைபடம் இல்லை.
நிதி இல்லாமலே ஆரம்பம்.
எத்தனை இலட்சங்களுடன் ஆரம்பம்?
ஒப்பந்த விபரம் இல்லை.
அதற்குப் பொறுப்பாக ஊரைச்சேர்ந்த யாருமே இல்லை

Nagoor Ariff
Dr. Jameel அவர்களே, உங்களின் கட்டுரையில் நிறையவே சந்தேகங்களை எழுப்புகின்ற விடயங்கள இருக்கின்றன. அவற்றை இங்கே சுட்டிக்காட்டினால் இதுவும் ஒரு விவாதமேடையாகி விடும் என்பதனால் தவிர்த்துள்ளேன்.
Junaideen Maankutty
செய்ய வேண்டியதை உடன் செய்யுங்கள்..... பேசி.....பேசி.....அறிக்கை விட்டு இருக்கவேண்டாம்.....இல்லண்டா ஹனிபா மொளலவி வருமானமும் குறைந்து போகுன்.......
Junaideen Maankutty
என் மதிப்புக்குரிய Dr.ஜெமீல் அவெர்கலுக்கு... நீங்கள் சொல்வதைத்தான் எம் மக்கலும் என்னிடம் எடுத்துரைத்தார்கள். ஆனால், சாய்ங்தமருது அரசியல் வாதிகள் அசிங்கமான்வர்களே!!!. உங்களை ஒரு கனம் மத்திக்காத மக்கள் வாக்கு பெற்றவர்கல்தான குளப்புகின்ரார்கள்....காரெனம் நீங்கள் வந்தால் களவு செய்ய முடியாதே.......
Fazeel Mba
நடக்கும் காரியங்கள் இருந்தால் சொல்லுங்கள் ,இதெல்லாம் வெறும் பகற்கனவு
Sabrath Majeed
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியத் தலைவராக அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்கள் முடிசூடிய ஆரம்ப காலத்தில் சாய்ந்தமருது கப்பத்துறைக்கு அடிக்கல் நாட்டினாரே..... யாருக்காவது ஞாபகம் இருக்கிறதா???
Jabbar Mba
தேர்தல் வந்தால் தோணாவை மட்டுமல்ல கடலையும் சுத்தம் செய்வார்கள்
Rahim Zhr
நகர அபிவிருத்தி அமைச்சின் அனுசரணையில் முகவெற்றிலை நகர் முகமிழந்து போனாலும்....மருதூர் முகவெற்றிலையாக பரிணாமம் அடைவது மகிழ்ச்சிதான் ,,,மு.கா.வின் தேர்தல் குண்டாக இல்லாவிட்டால் அதுவே போதும்
Faizer Thilsath ·
மேலுக்குத்தான் சொல்லிட்டார்கள் நான் வேர சொல்லனுமா முதல்ல சாய்ந்தமருது பூங்காவ முந்தி இருந்த மாரி திறந்த வெளி இடமா தாங்க. திறந்த வெளியா இருக்கும் போது இருந்த அந்த இடத்துக்கும் இப்ப இருக்கிற இடத்துக்கும் நிறைய வித்தியாசம் இப்ப அது.......... சாய்ந்தமருது மத்தி சிறைச்சாலை.!பிறகு தோணா வேலைய செய்யலாம்.............
Mansoor Mansoor ·
இதுதல்லாம் நடக்கிறது கதையா நாடகம்
Moulavi Athambawa Azwar ·
Seium welaiyai thayawu seithu wehappadutthungal. Allahwin uthavi warum
Mohamed Jawahir ·
எல்லாவற்றையும் அரசியலாகவும் சுயநலமாகவும் பார்க்கும் விசமிகள் இருக்கத்தான் செய்கிறார்கள். செய்பவை நல்லவையாயின் வரவேற்போம். இதுவரைக்கும் யாரும் செய்ய முன்வராத சேவை ஒன்றினை ஒரு குழு செய்ய முன்வந்து ஆரம்ப வேலைகளை செய்தும் காட்டி உள்ளது. வைக்கோலில் படுத்த என்னவோ போல் குழப்ப முனைவது அநியாயம். அவருக்கு வருமானம் இவருக்கு வருமானம் என்று கதை பேசி அவதூறுகளை பரப்பாமல் ஒத்துழைப்பு வழங்குவதே ஒரு சிறந்த மனிதப் பண்பாகும். ஊருக்கு எதுவுமே செய்யாது அரசியல் செய்ய நினைக்கும் சிலர் தான் யாராவது எதையாவது செய்யவரும் போது குழப்பி அவர்களின் மனதை நோகடித்து செய்யாமலாக்கி பின்னர் அதையே மூலதனமாக்கி அரசியல் செய்து கொண்டிருக்கின்றனர். தயவு செய்து ஒத்துழைத்து திட்டமிட்டவாறு செய்து முடிக்க முடிந்தால் ஆதரவும் முடியாவிட்டால் மூடிக்கொண்டும் இருப்பது நல்லது.
Sabrath Majeed ·
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியத் தலைவராக அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்கள் முடிசூடிய ஆரம்ப காலத்தில் சாய்ந்தமருது கப்பத்துறைக்கு அடிக்கல் நாட்டினாரே..... யாருக்காவது ஞாபகம் இருக்கிறதா???
Like · Reply · June 22 at 2:38pm
Sajath Saja Amm
 Mm athatkuriya velaihalum anmayil nadai petrathu thangaluku theriyathu pola. Thurathista vasamaha angu thuraimuham amaika mudiyatha nilai ullathu. Iyatkayudan poaddi poda mudiyathe brother..
Mohamed Nafeer ·
Election vanthal slmc varum madeyerhal undu aanal nanmpavendam
Junaideen Maankutty
தோனா பற்றி வரலாறு, உங்கலுக்கு விளக்கம் தேவை என்றால் கதைக்கவும் 0776228030.
Sabrath Majeed ·

தேர்தல் வந்தால் தோணாவை மட்டுமல்ல கடலையும் சுத்தம் செய்வார்கள் இந்த Slmc

மருதூர் அபூஅப்துல்லாஹ்வின் செய்திகள்
சாய்ந்தமருது தோணா அபிவிருத்தித்திட்ட மாயை!
தென்கிழக்கு நிர்வாக அலகு,
கல்முனை கரையோர மாவட்டம்,
சாய்ந்தமருது தோணா அபிவிருத்தித் திட்டம்.....
கேட்க நல்லாத்தான் இருக்கு.
ஆனால,இதெல்லாம் நடக்கனுமில்ல.

Arafath JP

மறைந்த மாமனிதர் மர்ஹூம் அஸ்ரப் யின் மரணத்தின் சூத்திரதாரிகளை 100 நாட்டகளுக்குள் கண்டுபிடிக்கசெய்வோம் என்று காய் நகர்த்தியதையும் நினவுபடுத்துங்கள், இதல்லாம் தேர்தல் துரும்புகள் எதிர்வரும் பொதுத்தேர்தலுக்கும் தற்போது துரம்பு ஒன்றை தேடுரார் போல

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top