இன்று நள்ளிரவுடன்
நாடாளுமன்றம் கலைக்கப்படும் சாத்தியம்?
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இன்று 24 ஆம் திகதி புதன்கிழமை
நள்ளிரவு நாடாளுமன்றம் கலைக்கப்படவுள்ளதாக அரசாங்கத்தின் உட்தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போதைய புதிய அரசாங்கத்தின் பதவிக்காலம் ஏப்ரலில் முடிவடைந்த
நிலையில், 20 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் தொடர்பாக கட்சிகளிடையே எந்தவொரு
இணக்கப்பாடும் காணப்படவில்லை. இந்நிலையிலேயே நாடாளுமன்றத்தை ஜனாதிபதி கலைத்து, தேர்தலை
அறிவிப்பார் என தெரியவருகிறது. 20ஆவது திருத்தம் தொடர்பில் கட்சிகளிடையே இணக்கப்பாடு
எட்டப்படவில்லை. இதனை கவனத்தில் எடுத்துகொண்டு புதிய நாடாளுமன்றத்தில் அந்த திருத்தத்தை
நிறைவேற்றிகொள்ளும் வகையில் மக்களின் ஆணையை கோரியே நாடாளுமன்றத்தை ஜனாதிபதி கலைக்கவுள்ளார்
என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
செப்டம்பர் மாதத்தில் புதிய நாடாளுமன்றம் நிறுவப்படும் என இதற்கு
முன்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பகிரங்கமாக கூறியிருந்தார். செப்டம்பர் மாதத்தில் புதிய நாடாளுமன்றம் நிறுவப்படுமாயின்
ஆகஸ்ட் மாத இறுதியில் நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்பட வேண்டும். நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு 52 முதல் 65 நாட்களுக்குள்
தேர்தல் நடத்தப்பட வேண்டும். எவ்வாறாயினும்,
இந்த வாரத்தில் நாடாளுமன்றம் கலைக்கப்படும் அண்மைக்காலமாக அரசியல் தரப்புத் தகவல்களை
மேற்கோள்காட்டி ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.
0 comments:
Post a Comment