92 வயது பாட்டியின் வயிற்றில்பதப்படுத்தப்பட்ட நிலையில்

7 மாத குழந்தையின் கரு

மருத்துவர்கள் வியப்பு



எகிப்தில் உள்ள மம்மிக்களைப் போல் 92 வயது மூதாட்டி ஒருவரின் வயிற்றில் கடந்த 50 வருடங்களாக குழந்தையின் கரு ஒன்று பதப்படுத்தப்பட்ட நிலையில் இருப்பது மருத்துவ உலகை வியக்க வைத்துள்ளது.
சிலி நாட்டைச் சேர்ந்த 92 வயது பாட்டி ஒருவர் வயோதிகத்தின் காரணமாக அடிக்கடி மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்வது வழக்கம், சமீபத்தில் அவரது இடுப்பு பகுதியில் எக்ஸ்-ரே செய்து பார்த்த போது அங்கு சந்தேகத்திற்கிடமான ஏதோ ஒன்று இருப்பது போல் தோன்றவே பல பரிசோதனைகளை மருத்துவர்கள் மேற்கொண்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அப்போதுதான் அவரது கருப்பைக்கு வெளியே கடந்த 50 வருடங்களாக பதப்படுத்தப்பட்ட நிலையில் ஒரு குழந்தையின் கரு இருப்பது தெரிய வந்தது. அது 7 மாதம் வளர்ந்த நிலையில் 2 கிலோ எடையுடன் இருந்தது மருத்துவர்களை வியப்பில் ஆழ்த்தியது. கர்ப்பகாலத்தின் போது குழந்தை இறந்து, உடலில் உள்ள கால்சியங்கள் படிந்து வயிற்றில் தங்கி விடுவதே இதற்குக் காரணம் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ள.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top