சாய்ந்தமருதுக்கு உள்ளூராட்சி சபை வழங்குமாறு
கிழக்கு மாகாண சபை பரிந்துரை
ஆவணத்தின் பிரதி பள்ளிவாசல் தலைவரிடம் கையளிப்பு

சாய்ந்தமருது பிரதேசத்திற்கு தனியான உள்ளூராட்சி சபையை ஏற்படுத்துமாறு கிழக்கு மாகாண சபை பரிந்துரை செய்துள்ளது. இந்த உத்தியோகபூர்வ எழுத்து மூல ஆவணத்தின் பிரதி சாய்ந்தமருது ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் தலைவர் அல்-ஹாஜ்  வை.எம் ஹனிபா அவர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாண சபையின் முஸ்லிம் காங்கிரஸ் குழுத் தலைவரும் அக்கட்சியின் இளைஞர் காங்கிரஸ் தலைவருமான .எம்.ஜெமீல் அவர்கள் இந்த ஆவணத்தை இன்று  18 ஆம் திகதி வியாழக்கிழமை கையளித்தார்.
இது தொடர்பான நிகழ்வு பள்ளிவாசல் அலுவலக மண்டபத்தில் நடைபெற்றது. இதில் பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையின் செயலாளர் எம் ஐ. அப்துல் மஜீத், அல்-ஹாஜ் ஏ.ஏ.சலீம்  உட்பட மற்றும் பலரும் கலந்து கொண்டனர்.

.உள்ளூராட்சி, மாகாண சபைகள் அமைச்சர் கரு ஜெயசூரியவுக்கு முகவரியிடப்பட்டுள்ள இப்பரிந்துரை ஆவணத்தில் கிழக்கு மாகாண சபையின் சபாநாயகர் ஆரியபதி கலப்பதி கையொப்பமிட்டுள்ளார். இந்த ஆவணம் சாய்ந்தமருது ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலுக்கு பிரதியிடப்பட்டிருக்கிறது.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top