ஒற்றைக் கண் தளபதி முக்தார் பெல்முக்தார் மரணம்
உறுதி செய்தது அல்-கய்தா


லிபியாவில் அமெரிக்கா நிகழ்த்திய வான்வழித் தாக்குதலில் போராளிகளின் முக்கியப் தலைவர் முக்தார் பெல்முக்தார் கொல்லப்பட்டதாக அந்த நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இதனை, அல்கய்தா சார்பில் வெளியிடப்பட்ட வீடியோ ஒன்றும் உறுதி செய்துள்ளது.
இதுகுறித்து லிபிய அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
லிபியாவில் அமெரிக்க போர் விமானங்கள் பயங்கரவாத இலக்குகள் மீது அண்மையில் தாக்குதல் நிகழ்த்தின. இதில் முக்தார் பெல்முக்தாரும், லிபியாவைச் சேர்ந்த சில போராளிகளும் உயிரிழந்தது உறுதியாகியுள்ளது.
போரில் ஒரு கண்ணை இழந்த போராளிகளின்  முக்கியப் தலைவரான பெல்முக்தார், அல்ஜீரியாவைச் சேர்ந்தவர். அல்-காய்தா அமைப்பின் முன்னாள் தலைவரான இவர், வட ஆப்பிரிக்க அல்-முராபிடெளன் போராட்ட அமைப்பின் தலைவராக செயல்பட்டு வந்தார்.
பல்வேறு பயங்கரவாதச் செயல்களுக்காக அமெரிக்கா உட்பட உலகின் பல்வேறு நாடுகளால் இவர் தேடப்பட்டு வந்தார்.

அல்ஜீரிய எரிவாயுத் தொழிற்சாலை ஒன்றில் கடந்த 2013-ஆம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்கு சதித் திட்டம் தீட்டியவர் இவர் எனக் கூறப்படுகிறது. அந்த தாக்குதலில் 38 பேர் உயிரிழந்தனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் ஐரோப்பியர்கள்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top