நகரசபை கோரிக்கையை
முன் வைத்து
சாய்ந்தமருதில் ஹர்த்தால் அணுஸ்டிப்பு
( படங்கள் இணைப்பு )
சாய்ந்தமருது
நகரசபை கோரிக்கையை முன் வைத்து இன்று (15.06.2015) ஆம் திகதி
திங்கள்கிழமை சாய்ந்தமருது ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலுக்கு முன்பாக
ஆயிரக்கனக்கான பொது மக்கள் ஒன்று கூடி அமைதியான முறையில்
கோஷங்களை எழுப்பி
கோரிக்கையை முன்வைத்தனர்
பள்ளிவாசலுக்கு
முன்பாக கூடியிருந்த
மக்களின் கைகளில்
""அனுமதி இல்லை அனுமதி இல்லை எமது உள்ளுராட்சி சபையை தடுத்த அரசியல் வாதி எவருக்கும் சாய்ந்தமருது வர அனுமதி இல்லை ""
""சாய்ந்தமருது மக்கள் கண்ணீர் வடிக்கிரார்கள் தன் முகவரி கேட்டு ""
“இது சுயநலத்திற்கான போராட்டம்
இல்லை பொதுநலத்திற்கான போராட்டம்"" என்பன போன்ற பதாதைகள் ஏந்தியிருந்ததைக்
காணக்கூடியதாக இருந்தது பள்ளிவாசல் சுவர்களிலும் இப்பதாதைகள் தொங்க
விடப்பட்டிருந்தன.
சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்றத்திற்கான தகுதி என புள்ளி விபரங்களும் காட்டப்பட்ட பதாதையும் இங்கு தொங்கவிடப்பட்டிருந்தது
தொன்மை:- 190 வருடங்கள்
நிலப்பரப்பு:- 9 சதுர மைல்கள்
சனத்தொகை:- 29825
வாக்காளர்கள்:- 18720
பிரதேச செயலகம் கிடைத்த திகதி:- 2001.02.04
ஏற்கனவே இருந்த சபை:- கரைவாகு தெற்கு கிராம சபை
தற்போது உள்ளூராட்சி சபை:- ???????
0 comments:
Post a Comment