அமெரிக்க தேவாலயத்தில் துப்பாக்கி சூடு
9 பேர் பலியானதாக அறிவிப்பு
அமெரிக்காவில் கறுப்பின மக்கள் பிரார்த்தனையில் ஈடுபடும் வரலாற்று சிறப்புமிக்க தேவாலயம் ஒன்றில் வெள்ளை இனத்தைச்
சேர்ந்த நபர் ஒருவர் துப்பாக்கி சூடு நடத்தியதில் 9 பேர் பலியாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக இந்த துப்பாக்கி சூட்டில் பலியானவர்கள் குறித்து, எவ்வித தகவலும் வெளிவராமல் இருந்ததால் குழப்பம் நீடித்தது. இந்நிலையில் ஒன்பது பேர் பலியாகியிருப்பதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் பற்றி சார்ல்ஸ்டன் நகர மேயர் முன்னிலையில், பொலிஸ் தலைவர் க்ரெக் முல்லன் கூறுகையில், வெறுப்பு காரணமாக இத்துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது 21 வயதுடைய அந்த நபர் துப்பாக்கி சூடு நடத்தியதில், 8 பேர் சம்பவ இடத்திலேயே பலியானதாக கூறிய முல்லன், காயமடைந்த இருவரில் ஒருவர் தெற்கு கரோலினா மருத்துவ பல்கலைக்கழகத்தில் சிகிச்சை பலனளிக்காமல் பலியானதாக கூறியுள்ளார். எனினும் இறந்தவர்கள் யார் யார் என்ற விவரத்தை வெளியிட அவர் மறுத்துவிட்டார்.
இச்சம்பவத்தில் பாதிரியார் கிளமென்டா பிங்க்னி மற்றும் அவரது சகோதரி ஆகியோர் பலியானதாக அங்கு வசிக்கும் சிறுபான்மை சமூக தலைவரான டாட் ரூதர்போர்டு கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment