இந்திய அன்பளிப்பாக
கல்முனை மாநகர சபைப் பிரிவுக்குள் 580 மில்லியன் ரூபா செலவில்
கலை,கலச்சார,மாநாட்டு மண்டபம்
-
முன்னாள் அமைச்சர் ஏ.ஆர்.மன்சூர்
தகவல்
கல்முனை மாநகர சபை பிரிவுக்குள் சுமார் 580 மில்லியன் ரூபா
செலவில் கலை,கலச்சார,மாநாட்டு மண்டபம் ஒன்றை அமைப்பதற்கு இந்தியா
முன்வந்திருப்பதாக முன்னாள் வர்த்தக,வாணிபத்துறை அமைச்சர் ஏ.ஆர்.மன்சூர்
தெரிவித்தார்.
இம்மண்டபத்தை கட்டி முடிப்பதற்கென இந்தியா (இந்திய நாணயத்தில்) 250 மில்லியன் ரூபாவை அன்பளிப்பாக வழங்குவதற்கு முடிவு
செய்திருப்பதாக இந்திய தூதுவராலயத்திலுள்ள இரண்டாவது நிலை பொறுப்பதிகாரி திரு. சந்திரு
(CHANCRU) தன்னிடம் தெரிவித்திருப்பதாகவும் முன்னாள் அமைச்சர் மன்சூர் மேலும்
தெரிவித்தார்.
கல்முனை பொது நூலக அபிவிருத்தி சம்மந்தமாக முன்னாள் அமைச்சர் மன்சூர் இந்திய தூதுவரைச் சந்தித்து
பல வேண்டுகோள்களை ஏற்கனவே விடுத்திருந்தார்.
இவ்வாறான ஒரு நிலையில்
இந்திய தூதுவராலயத்திலுள்ள இரண்டாவது நிலை பொறுப்பதிகாரி திரு. சந்திரு (CHANCRU) முன்னாள் அமைச்சர் மன்சூர் அவர்களோடு
தொடர்பு கொண்டு கல்முனைப் பிரதேச மக்களுக்கு அன்பளிப்பாக (இந்திய நாணயத்தில்) 250 மில்லியன்
ரூபா செலவில் கலை,கலச்சார,மாநாட்டு மண்டபம் ஒன்றை
அமைப்பதற்கு இந்தியா முன்வந்திருப்பதான சந்தோஷமான செய்தியைத் தெரிவித்துள்ளார்.
இக் கலை,கலச்சார,மாநாட்டு
மண்டபம் கல்முனை மாநகர சபை பிரிவுக்குள்
அமைப்பது தொடர்பாக கல்முனை மாநகர சபைக்கு எம்மால் தெரியப்படுத்தி இருந்தும் இதுவரை அச்சபையிலிருந்து
எமக்கு எதுவித தகவலும் கிடைக்கப் பெறவில்லை என்ற கவலையையும் திரு. சந்திரு (CHANCRU) வெளியிட்டதாகத்
தெரிவிக்கப்படுகின்றது.
கல்முனையில் கலை,கலச்சார,மாநாட்டு மண்டபம் அமைப்பது
தொடர்பான இந்தியாவின் நடவடிக்கைக்கு முன்னாள் அமைச்சர் மன்சூர் இந்திய தூதுவராலயத்திற்கு
நன்றிக் கடிதம் ஒன்றையும் அனுப்பி வைத்துள்ளார்.
0 comments:
Post a Comment