22க்கு மேல் இருக்க வேண்டிய முஸ்லிம்களின்
பாராளுமன்ற பிரதிநித்துவம்
15 ஆகக் குறையும் ஆபத்து
- சாய்ந்தமருதில் அஸாத் சாலி
வன்னியில்
உள்ள முப்பதாயிரம் வாக்குகளை சிதறடித்து ரிஷாட் பதியுதீனை தோற்கடிக்க வேண்டும் என்று முஸ்லிம் காங்கிரஸ் வன்னியில்
தனித்து போட்டியிடுவதாக தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும் மத்திய மாகாண சபை உறுப்பினரும்
ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப்பட்டியல் வேட்பாளருமான அஸாத் சாலி குற்றம் சுமத்தினார்.
ஐக்கிய தேசியக் கட்சியை ஆதரித்து சாய்ந்தமருது பௌஸி விளையாட்டு மைதானத்தில் நேற்று இரவு (2015-08-04) இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
.பொலிஸார் ஒலிபெருக்கியை தடை செய்திருந்த நிலையில் அஸாத் சாலி உரையாற்றினார்.
முஸ்லிம்களுக்கு
ஏதும் பிரச்சினை
என்றால் அவர்களுக்காக
நாமே களத்தில்
இறங்குவோம் “ரணில் வந்தால் பிரச்சினை வரும்
என்றும், மஹிந்த
வந்தால் நிம்மதியாக
இருக்கலாம் என்றும் மஹிந்த வந்தால் அவரது
வீட்டுக்கும் கிரீஸ் மனிதன் வருவான் என்பதை
மறந்து முன்னாள்
பாராளுமன்ற
உறுப்பினர் அஸ்வர் கூறித்திரிகின்றார் எவ்வாறான கஷ்டங்கள்
வந்தாலும் முஸ்லிம்
உம்மத்துக்காக நாங்களே முன்வருவோம் .
இன்று
முஸ்லிம்களின் தலைவர்கள் என்று கூறிக்கொடிருப்போர் மக்களின் வாக்குகளைப் பெற்றுக்
கொண்டு அவர்களை
நட்டாற்றில் விட்டு அவர்கள் மட்டும் சுகபோகம்
அனுபவித்துக்கொண்டிருக்கிறார்கள். இவ்வாறான தலைவர்கள்
தொடர்பில் மக்கள்
அவதானமாக இருக்க
வேண்டும்.
மீண்டும்
மகிந்தவின் யுகத்துக்குள் நாங்கள் புகுந்துவிடாது முஸ்லிம்களின் உணர்வுகளை
மதிக்கின்ற நாட்டை அபிவிருத்தி செய்யக்கூடிய ஐக்கிய
தேசியக்கட்சிக்கு ஒற்றுமையுடன் வாக்களித்து ஐக்கிய தேசியக்
கட்சியை வெற்றியடையச் செய்ய வேண்டும் .
மைத்திரிபால
சிறிசேன அவர்கள்
வென்று விடுவார்
தாங்கள் தனிமைப்பட்டு
விடுவோம் என
பயந்த றவூப்
நானா தபால்மூல
வாக்களிப்பும் முடிந்த பின்பே எங்களுடன் வந்து
சேர்ந்தார். இப்போதும் ஐக்கிய
தேசியக்கட்சியே வெல்லும் என்பதற்காக ஐக்கிய தேசியக்கட்சியுடன்
இணைந்துள்ளார் 22க்கு மேல் இருக்க
வேண்டிய முஸ்லிம்களின்
பாராளுமன்ற
பிரதிநித்துவம் இவரின் மடத்தனமான வியூகத்தால் 15 ஆகக் குறையும்
ஆபத்து ஏற்பட்டுள்ளது.
நம்மிடையேயுள்ள
இரண்டு சிறிய
கட்சிகளும் ஐக்கிய தேசியக் கட்சியுடனேயே இணைந்து
கேட்கிறார்கள் 30000 வாக்குகளே உள்ள
வன்னிக்குச் சென்றும் மட்டக்களப்புக்கு வந்தும் வன்னியில் றிசாத்தையும் மட்டக்களப்பில் அமீர் அலியையும் தோற்கடிக்க முயற்சிக்கிறார்.
நாட்டின்
அபிவிருத்திக்கும், எதிர்கால சந்ததிகளுக்கு
நமது இலங்கையை
சிறந்த முறையில்
கையளிக்க விரும்பும்
ஒவ்வொரு குடிமகனும்
ஐக்கிய தேசியக்கட்சியையே
ஆதரிக்க வேண்டும்
ஐக்கிய தேசியக்கட்சியில்
போட்டியிடும் சிறந்தவர்களை ஆதரிக்குமாறு அஸாத் சாலி கேட்டுக் கொண்டார்.
0 comments:
Post a Comment