முஸ்லிம் காங்கிரஸ்காரர்களின் தோல்விப்பயம்
இன்று மாலை சமுகதளங்களில் தெரிந்தது

-    சிராஸ் மீராசாஹிப்
(அகமட் எஸ். முகைடீன்)

கிழக்கு மாகாணத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அதிவேகமான வளர்ச்சியினை சகிக்க முடியாதவர்கள் மக்களின் மனங்களில் உளவியல் ரீதியான மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் சமூக வலைத் தளங்களில் தமது பிரச்சாரங்களை முன்னெடுத்துவருவதாக முன்னாள் கல்முனை மாநகர முதல்வரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மயில் சின்ன ஐந்தாம் இலக்க வேட்பாளருமான சிராஸ் மீராசாகிப் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் இன்று சாய்ந்தமருது ஜூம்ஆ பெரியபள்ளிவாசலில் எனக்கும் எமது தேசியத் தலைவரும் அமைச்சருமான றிசாத் பதியுதீனுக்குமிடையில் வாக்கு வாதம் மூண்டு பிரச்சினை ஏற்பட்டதாக முகவரியில்லாதவர்கள் சமூக வலைத்தளங்களில் பொய்யான விடயங்களை பரப்பி வருகின்றனர். அவ்வாறு எந்தவிதமான பிரச்சினையும் ஏற்பட்டது கிடையாது. பள்ளிவாசல் நிர்வாகத்தினர் எம்மை அன்போடு வரவேற்று கலந்துரையாடினார்கள். ஆனால் இதற்கு முற்றிலும் மாற்றமான கருத்துக்களை சில விசமிகள் திட்டமிட்டு சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர்.

முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினரின் தோல்வி அவர்களின் கண்கள் முன்னே தெரிகின்றது. தற்போது நடைபெறும் தேர்தலுக்கு மக்களிடம் எதைச் செல்லி வாக்கு கேட்பது என்று புரியாமல் தடுமாறுகின்றனர். அவர்கள் செய்தது என்ன என்பதை மக்கள் நன்கறிந்தவர்களாக இருக்கின்றார்கள். இதனால் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் மக்கள் அதிருப்தியுற்றுள்ளனர். தற்போது மக்கள் மாற்றம் வேண்டி நிற்பதனால் அவர்களுக்கான ஆதரவு பாரிய அளவில் குறைந்துள்ளதை உணர்கின்றனர். எனவே செய்வதறியாது மக்களின் மனங்களிள் உளவியல் ரீதியான மாற்றத்தை ஏற்படுத்தி தங்களை வலுப்படுத்த முனைகின்றனர். ஆனால் இவர்களின் இந்த நாடகம் மக்கள் மத்தில் பலிக்கப் போவதில்லை. மக்கள் இவர்களின் தேர்தல் கால நாடகங்களை நன்கறிந்தவர்கள், இதனால் இவர்களுக்கு தகுந்த பாடம் மக்கள் புகட்டுவர். 

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top