கம்பஹா மாவட்டமும்
முஸ்லிம் பிரதிநிதித்துவமும்.
இன்று தேர்தல்களம் சூடு பிடித்துள்ள நிலையில் அனேகர் தாம் யாருக்கு வாக்களிப்பது என்பதை முடிவெடுத்திருப்பர். இம்முடிவுகளின் தொகுப்பே இனி வரும் ஐந்தாண்டுகளுக்கு எம்மை ஆளப்போகிறது. இவை சாதாரண முடிவுகளல்ல எம்மை ஆளப்போகும் எமது தலையெழுத்துக்களின் பிரதிகள். கம்பஹாவில் A.H.M நவ்ஷாத் மற்றும் சிலர் போட்டியிடுகின்றனர். இதில் ஒப்பீட்டளவில் A.H.M நவ்ஷாத் அதிக விருப்பு வாக்குகள் கிடைக்கும் சாத்தியமுள்ளது.
எமது
வாக்கு ஒரு
அந்நியருக்குப் போவதால் தனிப்பட்ட இலாபங்கள் தவிர்ந்து
சமூகத்திற்கான பிரயோசனங்கள் மிகக் குறைவே. கம்பஹாவைப்
பொறுத்தவரை ஒரு முஸ்லீம்பாராளுமன்றபிரதிநிதித்துவம்
இன்றைய சூழ்நிலையில்
அசாத்தியமே. இருப்பினும் A.H.M நவ்ஷாதிற்கு
இடும் ஒவ்வொரு
வாக்கும் முஸ்லிம்களையையும்
ஜனாதிபதி மைத்திரியையும்
வலுப்படுத்த உதவும்.
முஸ்லிம்
காங்கிரஸ் என்பது
வெறும் அரசியல்
இலாபத்தை தேடும்
கட்சியாக மாறிவிட்டது.
முஸ்லிம் காங்கிரஸின்
பிறப்பிடமான கிழக்கை கூட அபிவிருத்தி செய்ய
முடியாமல் அரசியல்
லாபத்தை மட்டுமே
எதிர் பார்க்கிறது.
இந்த நிலையில்
மு.கா.
கம்பஹா மாவட்டத்தில்
முஸ்லிம்களுக்கு என்ன செய்யப் போகிறார்கள்?
முன்னாள்
நகரசபைத் தலைவர்
A.H.M நவ்ஷாதின் சொந்த ஊரான வத்தளை பிரதேசத்தை
பாருங்கள். அங்கு அவ்வளவு எண்ணிலடங்காத அபிவிருத்திகள்
செய்துள்ளார். போதைக்கு அடிமைப் பட்ட இளைஞர்களை
மீட்டுள்ளார். நகரசபைத் தலைவர் என்ற பதவியில்
இருந்து கொண்டே
இத்தனை இத்தனை
அபிவிருத்திகள் என்றால்? கம்பஹாவில் A.H.M நவ்ஷாத் பாராளுமன்றம்
சென்றால் முஸ்லிம்களின்
உரிமைகளும் தரமும் பாதுகாக்கப் பட்டு உயர
அவர் பாடுபடுவார்
என்பதில் யாருக்கும்
ஐயமில்லை!
நாம்
தமது அற்ப
இலாபங்களுக்கு அப்பால் ஒரு பொதுத்தளத்தில் சமூக
நலன்களுக்காக வஞ்சகம் இல்லாமல் சிந்திப்பது மாபெரும்
கடமையாகும்.
அவசியமான
தருனத்தில் எமது முஸ்லீம்களுக்கு ஆதரவாக நம்மால்
இயன்றதை செய்யவோம்
வாருங்கள்....
0 comments:
Post a Comment