வசந்தம் தொலைக்காட்சியின் அதிர்வு நிகழ்ச்சியும்
முஸ்லிம் காங்கிரஸின்
மூன்று வேட்பாளர்களும்
வசந்தம் தொலைக்காட்சியில் நேற்று 4 ஆம் திகதி இரவு
9. 00 மணிக்கு நேரடியாக ஒளிபரப்பான அதிர்வு நிகழ்ச்சியில் திகாமடுல்ல தேர்தல்
மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் யானைச் சின்னத்தில் போட்டியிடும் முஸ்லிம்
காங்கிரஸ் வேட்பாளர்களான முன்னாள் பாரளுமண்ற
உறுப்பினர்கள் எச்.எம்.எம். ஹரிஸ், பைஸல் காஸீம் மற்றும் கிழக்கு
மாகாண அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர் ஆகியோர்கள் நேரடியாகத் தோன்றி நிகழ்ச்சித்
தயாரிப்பாளர் எம்.எஸ்.எம். இர்பான் மற்றும் பொதுமக்களின் கேள்விகளுக்கு பதிலளித்தனர்.
தொலைக்காட்சி நிகழ்ச்சித் தயாரிப்பாளர்எம்.எஸ்.எம். இர்பான் மக்கள் சார்பாக திகாமடுல்ல
மாவட்டத்தின் கரையோரப் பிரதேசங்களில் உள்ள பெரும்பாலான மக்களிடம் உள்ள சந்தேகங்களை
அப்படியே மூன்று வேட்பாளர்களிடமும் கேள்விகளாகத் தொடுத்து நிகழ்ச்சியை
ஆரம்பித்தார்.
நிகழ்ச்சி தயாரிப்பாளரால் வேட்பாளர்களில் ஒருவரான முன்னாள் பாரளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரிஸ் அவர்களிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு
நேரடியாக பதில்களை மக்களுக்கு விளங்கக்கூடியவாறு தெரிவிக்காமல் மூக்கை நேரடியாகத் தொடாமல்
காதைச் சுற்றி மூக்கைத் தொடுவது போன்று பதில்களை வழங்கிக்கொண்டிருந்தார்.
நிகழ்ச்சித் தயாரிப்பாளர் இர்பான் மற்றும் கல்முனையில் இருந்து
ஒரு பொதுமகன் கேட்டிருந்த கல்முனைப் பிரதேசத்தில்
தங்களை மீறி எந்த ஒரு அரசியல்வாதியும் அபிவிருத்தி வேலைகளைச் செய்ய முடியாத நிலை இருந்ததாகவும்
அதனால் கல்முனை முஸ்லிம் பிரதேசங்களில் பல வீதிகள் குன்றும் குழியுமாகக் காணப்படுவதாகவும்
கல்முனைப் பொதுச் சந்தைக் கட்டடம் அபிவிருத்தி எதுவுமின்றிக் காணப்படுவதாகவும் முன்னாள்
பாரளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரிஸ் அவர்களிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு முழுப்
பூசனிக்காயை சோற்றுப் பிங்கானுக்குள் புதைப்பது போன்று அவரால் பதில் தரப்பட்டதாக பொதுமக்களால்
கருத்துக்கள் பரிமாரப்பட்டது.
அன்று நெடுஞ்சாலைகள் அமைச்சராக இருந்த ஏ.எல்.எம்.அதாவுல்லா
2003 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 27 ஆம் திகதி வெள்ளிக்கிழமை தனது இணைப்புச் செயலாளர் ஏ.சி.ஏ.சத்தார்
தலைமையில் கல்முனைக் கடற்கரைப் பள்ளிவாசல் வீதியின் அபிவிருத்தி வேலைகளை ஆரம்பித்து
வைப்பதற்கு கல்முனைக்கு வருகை தந்தபோது அவருக்கு எதிராக மக்களில் சிலரைச் செயல்பட வைத்து
பாதை அபிவிருத்தி வேலைகளை தடுத்ததை உதாரணமாக
அவருக்கு முன் வைக்கமுடியும் என இச்சந்தர்ப்பத்தில் மக்கள் அச்சம்பவத்தை நினைவுக்கு
கொண்டுவந்தனர்.
முன்னாள் பாரளுமண்ற உறுப்பினர் பைஸல் காஸீம் அவர்களிடம் நிகழ்ச்சித்
தயாரிப்பாளரால் கேட்கப்பட்ட கட்சியின் தேர்தல்
விஞ்ஞாபனம் தொடர்பான கேள்விக்கு பைஸல் காஸீம் அவரே ஒரு தெளிவில்லாத நிலையில் மக்களுக்கு
சரியான முறையில் பதிலளிக்க முடியாமல் ஏதோ புரிந்துணர்வு உடன்படிக்கை என்று முட்டாள்களுக்கு
பதிலளிப்பது போன்று திக்கு முக்காடி பதிலளித்ததைப் பார்க்கும்போது பரிதாபகரமாக இருந்தததாக
தொலைக்காட்சி பார்வையாளர்களால் கருத்துக் கூறப்பட்டது.
தற்காலம் மக்கள் எல்லோரும் கல்வியில் முன்னேற்றம் கண்டுவரும்
காலம். தொடர்பு சாதனங்கள் அதிகரித்துள்ள காலம். இக்காலத்தில் முன்னாள் பாரளுமண்ற உறுப்பினர் பைஸல் காஸீம் அவர்களின்
பதில் 75 வருடங்களுக்கு முன் வாழ்ந்த மக்களுக்கு அளித்த பதிலாகத்தான் தங்களுக்கு விளங்கியதாக
இளைஞர்கள் தங்களுக்குள் கருத்துக்களைப் பரிமாரிக்கொண்டனர்.
தொடர்பு சாதனங்கள் அதிகரித்துள்ள இக்
காலத்தில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் முஸ்லிம் காங்கிரஸ் செய்துள்ளதாக முன்னாள்
பாரளுமன்ற உறுப்பினர் பைஸல் காஸீம் தெரிவித்த புரிந்துணர்வு உடன்படிக்கை மக்களுக்கு
வெளிச்சத்திற்கு வராமல் இருப்பது விந்தையிலும் விந்தை இதுவும் முழுப் பூசனிக்காயை சோற்றுப் பிங்கானுக்குள் புதைப்பது போன்று அவரால் பதில் தரப்பட்டதாக
பொதுமக்களால் கருத்துக்கள் பரிமாரப்பட்டது.
மாகாண சபை உறுப்பினர் ஆரிப் சம்சுதீன் தங்களின் கூட்டங்களில்
கலந்து கொள்கின்றாரா? தேர்தல் நடவடிக்கைகளுக்கு தங்களுக்கு அவரிடமிருந்து ஒத்துழைப்புக்கள்
கிடைக்கின்றதா? என்ற கேள்விகளுக்கு முன்னாள் பாரளுமண்ற உறுப்பினர் பைஸல்
காஸீம் இல்லை என்று பதிலளித்தார்.
மற்றொரு வேட்பாளரான மாகாண அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர்
அவர்களிடம் நிகழ்ச்சித் தயாரிப்பாளரால் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு கட்சியில் உள்ள சில
பிழைகளை அவர் ஒத்துக்கொண்டவராக சாதுரியமாக பதிலளித்ததைக் காணக்கூடியதாக இருந்தது.
மொத்தத்தில் நிகழ்ச்சித் தயாரிப்பாளர் எம்.எஸ்.எம். இர்பானின்
கேள்விகளுக்கு இவர்கள் நேரடியாக பதில் தராமல் விழுங்கிக் கொண்டு பதிலளித்ததையும் சில
கேள்விகளுக்கு இவர்கள் மற்றவர்களின் முகத்தைப் பார்ப்பதையும் காணக்கூடியதாக
இருந்ததாகவும் தொலைகாட்சி இரசிகர்கள் கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர்.
0 comments:
Post a Comment