கிழக்கு மாகாண முஸ்லிம்
வேட்பாளர்களிடம்
கிழக்கு முஸ்லிம் கல்விப் பேரவை விடுக்கும்
வேண்டுகோள்!
2015
ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில்
போட்டியிடும் கிழக்கு மாகாண முஸ்லிம் வேட்பாளர்கள்,
தமது கொள்கைகளையும்
எதிர்கால வேலைத்
திட்டங்களையும் முன்வைக்குமாறு கிழக்கு முஸ்லிம் கல்விப்
பேரவை வேண்டுகோள்
ஒன்றை விடுத்துள்ளது.
கடந்த சனிக்கிழமை
(01.08.2015) பேரவையின் தலைவர் மௌலவி
கலாநிதி எம்.எஸ். எம்.ஜலால்தீன் (கபூரி)
தலைமையில் இடம்பெற்ற
பேரவையின் மத்திய
செயற்குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கேற்ப
இந்த வேண்டுகோள்
விடுக்கப்படுவதாக அறிவிக்கப்படுகிறது.
இது
தொடர்பில் பேரவை
விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;
இம்முறை 2015 ஆம் ஆண்டு பாராளுமன்றத்
தேர்தலில் கிழக்கு
மாகாணத்தில் களமிறங்கியுள்ள சகல முஸ்லிம் வேட்பாளர்களிடமும்
இம்முறை பொதுத்
தேர்தலில் போட்டியிடும்
கிழக்கு மாகாண
முஸ்லிம் வேட்பாளர்கள்
பின்வரும் வினாக்கள் கவன ஈர்ப்புக்காக
விடப்படுகின்றன.
1. தேசிய
இன ஒற்றுமை
என்ற அடிப்படையில்
குறிப்பாக கிழக்கில்
வாழும் மூவின
மக்களிடையேயும் சக வாழ்வைக் கட்டியெழுப்பவதில் எதிர்கால பாராளுமன்ற உறுப்பினர்களின் திட்டங்கள்
எவை?
2. எம்மோடு
இணைந்து வாழும்
தமிழ் மக்களைப்
பாதிக்காத வகையில்
நகர விரிவாக்கம்,
தனியான உள்ளுராட்சிக்
கோரிக்கை, கரையோர
மாவட்டக் கோரிக்கை
போன்றவை எவ்வாறு
அணுகப்பட வேண்டும்?
3. தேசிய
நல்லிணக்கத்தைப் பாதிக்கும் பெரும்பான்மை சமூகத்தில் காணப்படும்
தீவிரவாதக் குழுக்களுக்கு எவ்வாறு பதிலளிப்பது? மற்றும்
முஸ்லிம்களுக்கெதிரான அவர்களது சந்தேகங்களை
எவ்வாறு தீர்த்து
வைப்பது?
4. கிழக்கு
மாகாணத்தின் 3 மாவட்டங்களினதும் அபிவிருத்தி,
உட்கட்டமைப்பு வசதிகள், சுகாதார, கல்வி வளர்ச்சியின்
ஒரு சமாந்தரமான
ஏற்றத்தாழ்வற்ற போக்கை எவ்வாறு கையாள்வது?
5. கிழக்கில்
கரையோடியுள்ள சீதனக்கொடுமையைத் தீர்த்து பெண்களின் சம
அந்தஸ்த்தைக் கட்டியெழுப்பவும், வீடில்லாப்
பிரச்சனைகளைத் தீர்க்கும் வகையிலும் தங்களது சமூகப்பார்வை
என்ன?
6. எம்மிடையேயுள்ள
கணிசமான கல்வியியலாளர்களையும்,
சமூக ஆர்வலர்களையும்
எதிர்கால அரசியலில்
உள்வாங்குவதற்கான திட்டங்கள் எவை? முஸ்லிம் சமூகத்தை
எவ்வாறு அரசியல்மயப்படுத்தலாம்?
இச் செயன்முறையைக்
கட்டியெழுப்புவதில் முஸ்லிம் சமுக
சிவில் அமைப்புக்கள்
எவ்வாறு உங்களுடன்
ஒத்துழைக்க வேண்டும்?
7. சீரழிந்து
செல்லும் இளைஞர்களின்
கலாசார பண்பாடுகளை,
வாழ்வியல் ஒழுங்குகளை
எவ்வாறு மீளமைக்க
முடியும்?
8. முஸ்லிம்
மக்களின் பறிபோன
விவசாயக்காணிகளை, வாழ்வியல் குடியிருப்புக்களை
மீளப்பெறுவதற்கான சாத்தியமான வழிகள் எவை? தமிழ்த்
தேசியக் கூட்டமைப்பு
சென்ற 100 நாள்
வேலைத்திட்டத்தில் எதிர்த்தரப்பில் இருந்து
கொண்டு வலிகாமம்,
சம்பூர் போன்ற
பாரம்பரிய தமிழ்க்காணிகளை
சட்டபூர்வமாக மீளப் பெற்றமையை முன்னுதாரணமாகக் கொண்டு
எதிர்கால முஸ்லிம்
தலைமைகள் எத்தகைய
இராஜதந்திரத்தைக் கடைப்பிடிக்கப் போகின்றார்கள்?
9. எமது
மாகாணத்தில் காணப்படும் கிழக்கு, தென்கிழக்கு பல்கலைக்கழகங்களையும்,
தேசிய கல்விக்கல்லூரிகளையும்
ஆசிரிய பயிற்சிக்
கலாசாலைகளையும் மேலும் வலுவூட்டுவதற்கான எதிர்கால செயற்திட்டங்கள்
எவை?
இவ்வினாக்களை
சகல முஸ்லிம்
வேட்பாளர்களும் கவனத்திற் கொண்டு இதற்கான தமது
காத்திரமான பதில்களை தேர்தல் மேடைகளில் கருப்பொருளாகக்
கொண்டு உரையாற்றுவதோடு
தத்தம் விஞ்ஞாபனங்களிலும்
பிரசுரங்களிலும் தமது உறுதி மொழிகளை முஸ்லிம்
சமூகத்திற்கு வழங்குமாறு கிழக்கு முஸ்லிம் கல்விப்
பேரவை சார்பில்
அதன் ஊடக
இணைப்பாளர் அஷ்ஷெய்க் எப்.எம்.ஏ.அன்ஸார் மௌலானா
(நளீமி) (விரிவுரையாளர்)
வேண்டுகோள் விடுக்கின்றார்.
வேட்பாளர்களுக்கு
அனுப்பி வைக்கப்பட்டுள்ள
இந்த வேண்டுகோள்
மகஜரில்
கிழக்கு
முஸ்லிம் கல்விப்
பேரவையின் தலைவர்
கலாநிதி எம்.எஸ்.எம்.ஜலால்தீன், செயலாளர்
எம்.எச்.எம்.நைறூஸ்
ஆகியோர் கையொப்பமிட்டுள்ளனர்.
0 comments:
Post a Comment