அமெரிக்காவில் முஸ்லிம் மாணவன் ஒருவனை
தீவிரவாதி என்று அழைத்த
ஆசிரியை
தற்காலிக பணிநீக்கம்
அமெரிக்காவில் முஸ்லிம் மாணவன் ஒருவனைப் பார்த்து ‘நீ ஒரு தீவிரவாதி’ அதனால்தான் சிரிக்கிறாய் என்று கூறி அழைத்த ஆசிரியை ஒருவர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டார்.
அமெரிக்காவில்
டெக்டாஸ் மாகாணத்தில்
உள்ள ஹீஸ்டன்
முதல் காலனியில்
உள்ள நடுநிலைப் பாடசாலையில்
7–வது வகுப்பில் படிக்கும் முஸ்லிம் மாணவன்
வாலீத் அபுஷாபான்
( வயது12).
சம்பவத்தன்று
வகுப்பறையில் ‘பென்ட் இட் லைக் பெக்காம்‘
என்ற சினிமா
படம் காட்டப்பட்டது.
அதை தொடர்ந்து
பரீட்சை நடத்தப்பட்டது.
அதன் பின்னர்
படத்தில் வந்த
காமெடி காட்சிகளை
நினைவுபடுத்தி மாணவன் வாலீத் சத்தமாக சிரித்துக்
கொண்டிருந்தான்.
அப்போது
அங்கு வந்த
ஆங்கிலமொழி ஆசிரியை வாலீத்தை பார்த்து ‘நீ
ஒரு தீவிரவாதி’
அதனால்தான் சிரிக்கிறாய் என்றாராம்.
அதைக்
கேட்டு உடன்
படிக்கும் மற்ற
மாணவர்கள் பலமாக
சிரித்தனர். அவர்களும் வாலீத்தை தீவிரவாதி என
அழைத்து கேலி
கிண்டல் செய்தனராம்..
இதனால்
மனவருத்தம் அடைந்த வாலீத் அதுகுறித்து தனது
தந்தை மாலிக்
அபுஷா பானிடம்
தெரிவித்தான். அவர் பாடசாலை நிர்வாகத்திடம்
தனது மகனை
தீவிரவாதி என
அழைத்த ஆசிரியை
மீது புகார்
செய்தார்.
0 comments:
Post a Comment