தமிழ் பேசும் மக்களுக்கு தனியான அலகு
சாத்தியமற்றது!
கொழும்பு ஊடகமொன்றுக்கு பிரதி அமைச்சர்
பைசல் காசீம் தெரிவிப்பு
தமிழ் பேசும் மக்களுக்கு தனியான அலகு பெற்றுக் கொள்வது
நடைமுறைச் சாத்தியமற்றது என முஸ்லிம் காங்கிரஸ் பிரமுகரும் பிரதி சுகாதார அமைச்சருமான
பைசல் காசீம் தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனைத்
தெரிவித்துள்ளார்.
அவர் தொடர்ந்தும் கூறுகையில்…
வட மாகாணசபையில் தமிழ் பேசும் மக்களுக்கான தனியான அலகு
உள்ளிட்ட யோசனைத் திட்டம் சரியானது என நான் கருதவில்லை.
இந்த யோசனை சிங்கள தமிழ் மக்களை பிரிக்கும் வகையில்
அமைந்துள்ளது.
தனியான அலகு அமைக்கப்பட்டால் நாட்டின் ஏனைய பகுதிகளில்
வாழ்ந்து வரும் தமிழ் பேசும் மக்கள் பிரச்சினைகளை எதிர்நோக்குவார்கள்.
தமிழ் பேசும் மக்கள் நாடு முழுவதிலும் வாழ்ந்து
வருகின்றார்கள், இவ்வாறான ஓர்
நிலையில் எவ்வாறு தனியான ஓர் அலகினை பெற்றுக்கொள்வது?
0 comments:
Post a Comment